For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசியாவிலேயே செலவு அதிகமான நகரம் சிங்கப்பூர்.. செலவு குறைவான நகரம் பெங்களூரு!

ஆசியாவின் செலவு குறைந்த நகரமாக பெங்களூரு இருப்பதாக புதிய ஆய்வு கூறுகின்றது.

Google Oneindia Tamil News

பெங்களூரு : ஆசியாவின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு நகரம் முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றில் தெரியவந்துள்ளது.

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் எனும் அமைப்பு 2018ம் ஆண்டுக்கான உலகளாவிய வாழ்க்கைச் செலவு என்ற தலைப்பில் உலகில் உள்ள 133 நகரங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 150 பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு, பேஷன், அடிப்படை பொருட்கள் உள்ளிட்ட சேவைகளின் விலைகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

Bengaluru Is The Cheapest City In Asia

இந்த ஆய்வின் படி, வாழ்க்கை செலவுக்கான பட்டியலில் பெங்களூரு நகரம் 129வது இடத்தில் உள்ளது. அதாவது, ஆசிய கண்டத்தில் பெங்களூரு நகரம் தான் செலவு குறைந்த நகரமாகும்.

இந்த பட்டியலில் சென்னை நகரம், 126வது இடத்தில் உள்ளது. டெல்லி 124வது இடத்திலும், மும்பை 121வது இடத்திலும் உள்ளன.

உலகின் செலவு அதிகமாக உள்ள நகரங்களில் சிங்கப்பூர் தான் முதல் இடத்தில் உள்ளது. அதிக செலவாகும் நகரங்களில் ஹாங்காங் நான்காவது இடத்தில் இருக்கிறது.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ், வெனிசுலா நாட்டின் தலைநகரம் காரகஸ், கஸகஸ்தான் நாட்டின் முன்னாள் தலைநகரான அல்மாட்டி, நைஜீரியாவில் உள்ள லாகோஸ் ஆகிய நகரங்கள் பெங்களூருக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேறி வருவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், தனிமனித வாழ்க்கை செலவு அடிப்படையில் இந்தியாவின் முன்னணி நகரங்கள் பின்தங்கி இருப்பதாக கூறுகிறது இந்த ஆய்வு முடிவு.

English summary
Bengaluru holds the 129th spot in a list of 133 countries, ranked according to their cost of living. Singapore, the world’s most expensive city, leads the list, which was released earlier this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X