For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவுரி லங்கேஷ் கொலை.. பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து கூறிய வாலிபர் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்தையடுத்து பேஸ்புக்கில் மோசமான கருத்துக்களை தெரிவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கியுள்ளது இந்த சம்பவம். ஆனால், இடதுசாரி சிந்தனை கொண்ட கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட நிலையில், வலதுசாரி கருத்துள்ள சிலர் அதை சிலாகித்து சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள்.

Bengaluru Priest arrested for 'spreading rumours'

மோசமாகவும், வன்முறையை ஆதரிக்கும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் எழுதுவோர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் யாதகிரி பகுதியை சேர்ந்த மல்லி அர்ஜுன் என்றற 25 வயது இளைஞர் இதுபோல பேஸ்புக்கில் எழுதிவந்ததை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள மல்லி அர்ஜுன், பெங்களூர், சந்திரா லேஅவுட் பகுதியில் தங்கியிருந்து, வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

English summary
The Bengaluru city cyber police have arrested a 25 year-old civil engineering diploma holder for posting offensive and derogatory comments on Facebook on Gauri Lankesh’s murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X