For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க சான்றிதழே இருந்தாலும் அபராதம்தான்.. ஐஎஸ்ஐ ஹெல்மெட்டுக்கே அனுமதி: பெங்களூர் போலீசார் அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள் அணிந்து வாகனம் ஓட்டினால் கூட அபராதம் விதிக்கப்படும், இந்திய தரச்சான்றிதழான, ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிய வேண்டும் என்று பெங்களூர் டிராபிக் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பெங்களூரில் அமலுக்கு வருகிரது.

Bengaluru traffic police says only wear ISI-marked helmets

ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் போன்ற லட்சக்கணக்கான மதிப்பு கொண்ட ஆடம்பர ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வைத்திருப்போர் பொதுவாக ரூ.15000த்துக்கும் மேற்பட்ட விலை கொண்ட வெளிநாட்டு தரமுத்திரையுள்ள ஹெல்மெட்டுகளை அணிவது வாடிக்கையாக உள்ளது. அவர்களும் இனிமேல் ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகளை அணிய வேண்டிடயது கட்டாயமாகியுள்ளது.

மேலே குறிப்பிட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளை இயக்கும்போது, சாதாரண ஹெல்மெட்டுகளை அணிவது பார்க்க நன்றாக இருக்காது என புலம்புகிறார்கள் பணக்கார இளைஞர்கள்.

மேலும், தாடை வரை மறைக்க கூடிய அளவிலான முழு ஹெல்மெட்டைதான் அணிய வேண்டும் தலையை மட்டும் மூடக்கூடிய வகையிலான ஹெல்மெட்டுகளை அணிய கூடாது என்பதும் பெங்களூர் போக்குவரத்து காவல்துறை உத்தரவு.

English summary
Bengaluru traffic police have said only riders who wear ISI-marked helmets will not be penalized when the rule comes into force from February 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X