For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரித் தண்ணீரை எப்படிப் போட்டு வீணடிக்கிறது பாருங்க இந்த கர்நாடகம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடச் சொன்னால் அய்யோ போச்சே போச்சே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது கர்நாடகம். ஆனால் பெங்களூருக்கு வழங்கப்படும் காவிரி குடிநீர் பாதி தண்ணீரை அது வீணாக்கி வரும் அவலச் செய்தியைப் பாருங்கள்.

கர்நாடகத்தில் காவிரி நீரைப் பயன்படுத்துவதில் பெங்களூரின் பங்கு 50 சதவீதமாகும். பெங்களூர் மக்கள் காவிரி நீரைத்தான் குடித்து வருகின்றனர். அதில் 49 சதவீத அளவு தண்ணீரை கர்நாடகம் வீணடித்து வருகிறதாம். இதை எந்தக் கணக்கிலும் கர்நாடக அரசு சேர்ப்பதில்லை. அதாவது காந்திக் கணக்கு என்று சொல்வார்களே அது போல.

ஒரு சொட்டைக் கூட தமிழகத்துக்காக கொடுக்க மாட்டோம் என்று யோக்கிய சிகாமணிகள் மாதிரி பேசும் கர்நாடக அரசுத் தரப்பு உண்மையில் பெங்களூருக்கு குடிநீருக்காக அனுப்பும் நீரில் பாதியை வீணாக்கி வருகிறார்களாம். இந்தத் தகவலை இந்தியாஸ்பெண்ட் ஆய்வுச் செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.

மிகப் பெரிய அளவில் இப்படி குடிநீரை வீணடிக்கும் நகரம் கொல்கத்தாதான். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் பெங்களூரும் காவிரி நீரை வீணாக்கி வருகிறதாம்.

49 சதவீத நீர் வீண்

49 சதவீத நீர் வீண்

பெங்களூர் மக்கள் தொகை அடர்த்தியானது, கர்நாடகத்தின் மக்கள் தொகை அடர்த்தி சராசரியை விட 13 மடங்கு அதிகமாகும். பெங்களூருக்கு தினசரி மொத்தம் 42,223 மில்லியன் லிட்டர் தண்ணீர் காவிரியிலிருந்து வழங்கப்படுகிறது. இதில் 49 சதவீத தண்ணீரை அது எதற்குமே பயன்படுத்தாமல் வீணடிக்கிறது.

40 சதவீதம் குடிநீருக்கு

40 சதவீதம் குடிநீருக்கு

மீதமுள்ள தண்ணீரில் 40 சதவீத அளவுக்கு வீடுகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. 5 சதவீதம் பாதி குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்குப் போகிறது. 4 சதவீதம் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்குப் போகிறது. மீதமுள்ள தண்ணீர் துப்புறவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான உபயோகத்திற்கு வழங்கப்படுகிறது.

கொல்கத்தாவுக்கு அடுத்த இடம்

கொல்கத்தாவுக்கு அடுத்த இடம்

இந்திய அளவில் தண்ணீரை வீணடிக்கும் நகரங்கள் வரிசையில் பெங்களூரு 2வது இடத்தைப் பிடிக்கிறது. முதலிடம் கொல்கத்தாவுக்கு அது. 50 சதவீத தண்ணீரை வீணடிக்கிறது. டெல்லி 26, சென்னை 20, மும்பை 18 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலக அளவில் சர்வதேச நகரங்களில் இந்த வீணடிப்பானது 15 முதல் 20 சதவீதம் வரைதான் உள்ளது. ஆனால் கொல்கத்தாவும், பெங்களூரும் அநியாயத்திற்குத் தண்ணீரை வீணடித்துக் கொண்டுள்ளன.

ஒரு நாளைக்கு 600 மில்லியன் லிட்டர் வேஸ்ட்

ஒரு நாளைக்கு 600 மில்லியன் லிட்டர் வேஸ்ட்

இது உண்மைதான் என்று பெங்களூர் குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் தலைவர் டிஎம் விஜயபாஸ்கர் ஒத்துக் கொள்கிறார். அவர் கூறஉகையில், கடந்த காலங்களை விட இப்போது தண்ணீர் அதிக அளவில் வீணாவது உண்மைதான். ஒரு நாளைக்கு 1400 மில்லியன் லிட்டர் நீர் பெங்களூருக்கு விநியோகிக்கப்படுகிறது என்றால் அதில் 600 மில்லியன் லிட்டர் வீணாகிறது என்பது உண்மைதான் என்றார்.

தண்ணீர்த் திருட்டு

தண்ணீர்த் திருட்டு

இந்த வீணடித்தலுக்கு முக்கியக் காரணம் ஆங்காங்கே தண்ணீரை பம்ப் போட்டுத் திருட்டுத்தனமாக எடுப்பதும் குடிநீர் வரும் குழாய்களில் ஏற்படும் கசிவுகளும்தான் முக்கியக் காரணமே. சட்டவிரோதமாக பலர் திருட்டுத்தனமாக பம்ப் போட்டு தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதை அரசு தடுப்பதே இல்லை. அதேபோல லீக்கேஜ் பிரச்சினை குறித்தும் அரசு துரிதமாக நடவடிக்கை எடுப்பதில்லையாம்.

லீக்கேஜை கவனிப்பதே இல்லை

லீக்கேஜை கவனிப்பதே இல்லை

மெயின் விநியோக பைப்புகளில் பெருமளவில் லீக்கேஜ் ஆகிறதாம். கிட்டத்தட்ட இதன் மூலம்தான் 88.5 சதவீத தண்ணீர் வீணாகிறதாம். பல்வேறு இடங்களில் நீர்க் கசிவு ஏற்படும் என்றும், இது வழக்கத்திற்கு விரோதமானது இல்லை என்றாலும் கூட இதை அவ்வப்போது சரி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறார்கள்.

அதிக அளவில் பயன்படுத்துகிறது

அதிக அளவில் பயன்படுத்துகிறது

கர்நாடகம் காவிரி நீரில் 270 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை பயன்படுத்தி் கொள்ள காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் அனுமதி அளித்துள்ளது. அதில், 80 சதவீதத்தை விவசாயத்திற்கும், மற்ற 20 சதவீதத்தை கிராமம் மற்றும் நகர்ப்புற வீடுகளுக்கு பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூரே அதிக அளவிலான தண்ணீரை பயன்படுத்தி வருகிறதாம்.

பெங்களூருக்கு மட்டும் 30 டிஎம்சி

பெங்களூருக்கு மட்டும் 30 டிஎம்சி

பெங்களூருக்கு மட்டும் 19 டிஎம்சி நீர் குடிநீருக்காக அனுப்பப்படுகிறது. சமீபத்தில் இதை மேலும் 10 டிஎம்சி உயர்த்தி 29 டிஎம்சியாக உயர்த்தி விட்டது கர்நாடக அரசு. இதற்குக் காரணம் கடந்த 2007ம் ஆண்டு பல கிராமப்புறப் பகுதிகள் பெங்களூர் நகரத்துடன் இணைக்கப்பட்டதால். இதை மொத்தமாக 30 டிஎம்சியாக தற்போது உயர்த்தியுள்ளனர்.

பம்ப் போட்டு எடுப்பதால் செலவும் அதிகம்

பம்ப் போட்டு எடுப்பதால் செலவும் அதிகம்

பெங்களூர் உயரமான இடத்தில் உள்ளது. இதனால் காவிரியிலிருந்து பம்ப் செய்துதான் தண்ணீரைக் கொண்டு வருகின்றனர். இதற்கு அதிக அளவில் செலவு பிடிக்கும். பெங்களூர் நகரில் நிலத்தடி நீரை மக்கள் சுத்தமாக வழித்தெடுத்து விட்டனர். மாசும் அதிகரித்து விட்டது. ஏரிகளையும் காலி செய்து கவிழ்த்து விட்டனர். மேலும் பெங்களூருக்கு அருகில் உள்ள 120 ஆண்டு பழமையான ஹெசரகட்டா மற்றும் 83 வருட பழமையான திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கங்களும் காலாவதியாகி விட்டன. எனவே காவிரியை மட்டுமே பெங்களூரு நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீணாகும் காவிரி நீரை சரி செய்யும் பணிகளை மாநில அரசு துரித கதியில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தண்ணீரின் தேவை அதிகரிக்கும்போது நிலைமையும் மோசமாகி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

English summary
While Karnataka is locking horns with Tamil Nadu to share the Cauvery water, its capital city Bengaluru is wasting nearly half of the water it receives from Cauvery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X