For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப்பர் பெர்த் ஒதுக்கீடு!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாரணாசி-இந்தூர் எக்ஸ்பிரஸில் சிவா பெருமானுக்கு சீட் ஒதுக்கிய ரயில்வே

    வாரணாசி: கோச் நம்பர் பி 5ல் சீட் நம்பவர் 64 பெர்த்தை கடவுள் சிவபெருமானுக்கு ஒதுக்கி உள்ளது ரயில்வே. வாரணாசி-இந்தூர் இடையே இயக்கப்படும் காசி மகாகல் இந்த ரயிலை தான் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

    வாரணாசி -இந்தூர் இடையிலான ரயிலை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முற்றிலும் 3ஏசி டயர் பெட்டிகளுடன் கூடிய இந்த ரயிலில் கோச் நம்பர் பி 5ல் சீட் நம்பவர் 64 பெர்த்தை கடவுள் சிவபெருமானுக்கு ஒதுக்கி உள்ளது ரயில்வே.

    berth for Lord Shiva in Kashi-Mahakal Express

    இதுபற்றி வடக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், " ரயிலில் சிவபெருமானுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு காலியாக விடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் மகாகலுக்கு இறைவன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு கோயில் கூட இருக்கையில் வரையப்பட்டுள்ளது" என்றார்.

    நெகிழ வைக்கும் பக்தி இசை, ஒவ்வொரு கோச்சிலும் இரண்டு அர்ப்பணிப்புள்ள தனியார் காவலர்கள் இருக்கிறார்கள். சைவ உணவு மட்டுமே இந்த ரயிலில் அனுமதி. வாரணாசி மற்றும் இந்தூர் இடையே வாரத்திற்கு மூன்று முறை இயங்கும் முழுமையான 3-ஏசி சேவை ரயில் ஆகும். இந்த ரயிலில் நிரந்தரமாக கடவுளுக்கு சீட்டை ஒதுக்குவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    English summary
    Varanasi: Seat number 64 of coach B5 in Kashi Mahakal Express (Varanasi-Indore) has been turned into a mini-temple of Lord Shiva.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X