For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சியை பிடிக்கப்போவது எந்த கட்சி கூட்டணி? நாடு முழுக்க பெட்டிங் தீவிரம்.. செம சர்ப்ரைஸ் கணிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    வேகமாக செயல்படும் எதிர்க்கட்சிகள்.. பெரும் கலக்கத்தில் பாஜக!- வீடியோ

    அகமதாபாத்: லோக்சபா தேர்தலையொட்டி ரூ.12,000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருகிறது என்ற தகவல் தலைசுற்ற வைக்கிறது.

    7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் 5 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. 118 தொகுதிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்க 2 கட்ட தேர்தல்கள் எஞ்சியுள்ளன. எனவே சூதாட்ட மார்க்கெட்டும் சூடுபிடித்துள்ளதாம்.

    கடந்த முறையை போல இம்முறை, பாஜக கூட்டணி அறுதி பெரும்பான்மையை பெற முடியாது என்பதுதான், பெரும்பாலான பெட்டிங் சந்தைகளின் கணிப்பாக உள்ளது.

    பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தவிர்த்த, மகாகட்பந்தன் (மெகா கூட்டணி), கணிசமான இடங்களை வெல்லும், இது தேர்தல் முடிவுக்கு பிறகு, குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்பதும், பெட்டிங் நிபுணர்கள் கணிப்பாக உள்ளது.

    தமிழகத்தில் 46 பூத்களில் தப்பு நடந்திருச்சு.. மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு: சத்ய பிரதா சாஹூ தகவல்தமிழகத்தில் 46 பூத்களில் தப்பு நடந்திருச்சு.. மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு: சத்ய பிரதா சாஹூ தகவல்

    காங்கிரஸ் வென்றால் லக்கி

    காங்கிரஸ் வென்றால் லக்கி

    அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடும் என நம்பும் சூதாட்டக்காரர்கள், பாஜக கூட்டணி மீது கட்டியுள்ள தொகை ரூ.11. அதேநேரம், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பெட் கட்டுவோருக்கு கிடைக்கும் தொகை ரூ.33 என்பதில் ஆரம்பிக்கிறது. அதாவது, காங்கிரஸ் வெற்றி பெற்றால், அதன் மீது பெட் கட்டியவர்களுக்கு அதிக தொகை கிடைக்கும்.

    பெட்டிங் புலிகள் கணிப்பு

    பெட்டிங் புலிகள் கணிப்பு

    தேசிய ஜனநாயக கூட்டணி 185-220 தொகுதிகளை வெல்லக்கூடும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 160-180 தொகுதிகளை வெல்லக்கூடும் என்பது, சூதாட்டக்காரர்கள் கணிப்பாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக பாஜக கூட்டணி 250 தொகுதிகளுக்கும் மேலாக வெல்லும் என்றுதான், கணித்தனர் சூதாட்டக்காரர்கள். ஆனால், அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு வாக்காளர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கான வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால், இந்த எண்ணிக்கையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதாம்.

    மெகா கூட்டணிக்கு பம்பர்

    மெகா கூட்டணிக்கு பம்பர்

    இதில் சுவாரசிய தகவல் என்னவென்றால், மகாகட்பந்தன் எனப்படும் மெகா கூட்டணி 225 தொகுதிகள் முதல் 250 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக பல சூதாட்ட நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே அடுத்ததாக ஆட்சியமைக்கப்போகும் கூட்டணி எது என்பதில் சூதாட்டக்காரர்களிடம் கடும் குழப்பம் நிலவுவதால், சூதாட்ட சந்தையும் சூடுபறக்கிறது.

    குஜராத் கள நிலவரம் எப்படி

    குஜராத் கள நிலவரம் எப்படி

    மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்திலும், கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. பாஜக கடந்த முறையைவிடவும் 6 தொகுதிகளையாவது இழக்கும் என குஜராத் சூதாட்டக்காரர்கள் பெட் கட்டிக் கொண்டிருந்தால், மும்பை, டெல்லியிலுள்ள பெட்டிங் பண்டிதர்களோ, 22 தொகுதிகளையாவது பாஜக வெல்லும், காங்கிரசுக்கு 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என கணிக்கிறார்கள்.

    உ.பி.யில் பெரும் சரிவு

    உ.பி.யில் பெரும் சரிவு

    பாஜகவின் பெரும் சரிவு உத்தரபிரதேசத்தில்தான் என்று கணிக்கிறார்கள் சூதாட்ட தரகர்கள். கடந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 73 தொகுதிகளை வென்றது. ஆனால், இம்முறை, 40 தொகுதிகளைத்தான் பாஜக வெல்ல கூடும், என்றும், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி 34 தொகுதிகளை வெல்லக் கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

    மோடிக்கும் புரிந்துவிட்டது

    மோடிக்கும் புரிந்துவிட்டது

    பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், பாஜக கடந்த முறையைவிட குறைவான தொகுதிகளைத்தான் வெல்ல வாய்ப்புள்ளதாம். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மோடி திடீரென பாராட்டியதன் பின்னணி, தொங்கு நாடாளுமன்றம் அமையப்போகிறது என்பதை கணித்ததன் அடிப்படையில்தான், என்கிறார்கள் பெட்டிங் புலிகள்.

    English summary
    As like as the past, this time, the BJP coalition can not get single majority, most of the betting markets are predicted in this way. Apart from the BJP and the Congress coalition, Mega Alliance will win substantial seats, which will lead to horse trade after the election result, they says.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X