For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தித்தித்தா தித்தித்தா... பரதத்தில் பரவசப்படுத்திய 92 வயது பெங்களூர் பாட்டி!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த 92 வயது பாட்டி அவ்வளவு அழகாக பரத நாட்டியம் ஆடி பரவசப்படுத்துகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பானுமதி ராவ் (92). பரதநாட்டியக் கலைஞரான இவரது நாட்டிய நிகழ்ச்சி கடந்த திங்களன்று நடைபெற்றது.

இதில், பால கிருஷ்ணனிடம் ஒரு தாய் பேசுவதை, தன் நடனத்தின் வாயிலாக காட்சிகளாக வெளிப்படுத்தியிருந்தார் பானுமதி. இந்த நடன நிகழ்ச்சியை, வீடியோவாக எடுத்த அவரது மகள் மாயா கிருஷ்ணா, அதனை தனது பேஸ்புக் பகக்த்தில் பதிவேற்றம் செய்தார்.

இந்த வீடியோவை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆறு லட்சம் பேரும் அதனைப் பார்த்துள்ளனர். 10 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நரைத்த முடிகளோடு, சுருக்கமான முகத்தோடு பானுமதி அபிநயம் பிடிக்கும் இந்த வீடியோ தான், இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

English summary
The video of a 92-year-old woman named Bhanumathi Rao has gone viral on the internet. The wrinkled-faced, pretty woman with silver hair wears a pink sari and gold necklace and performs on ‘Krishna ni begane baaro’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X