For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று நாடு முழுவதும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு: உஷார் நிலையில் போலீஸ்

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடத்த சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று நாடு முழுவதும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு-வீடியோ

    டெல்லி: கல்வி, வேலைவாய்ப்பில் உரிய முன்னுரிமை கோரி இன்று நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த சில அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி உச்சநீதிமன்ற கொண்டு சட்டத்திருத்தத்தால் அந்த சட்டமே நீர்த்து போனது. இதை திரும்ப பெற கோரி வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

    Bharat Bandh expected today for demanding reservation in job and education

    மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஏராளமான பொருட்கள் நாசமடைந்தன. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரி சில அமைப்புகள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளன.

    ஏற்கெனவே நடந்த வன்முறை மீண்டும் நிகழாத வண்ணம் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியிலும் உயிர் பலி ஏற்படாதவாறு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    The Union home ministry advises all states to strengthen security and check any possible violence after certain groups called for a Bharat Bandh today against caste-based reservation in jobs and education.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X