For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதியார் பிறந்த நாளையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மகாகவி பாரதியார் பிறந்த நாளையும் தேசிய விழாவாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் நேற்று பாஜக எம்.பி தருண் விஜய், திருவள்ளுர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்; திருக்குறளையும் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Bharathiyar's birth anniversary to be celebrated in Nationwide

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு திருவள்ளுவர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இதற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தருண் விஜய் எம்.பி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படும். திருக்குறள் நூலை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் விநியோகிக்கப்படும்.

அதேபோல் பாரதியார் பிறந்த நாள் விழாவையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

English summary
Birth anniversary of famous Tamil poet Bharathiyar will be celebrated in Nationwide, Union HRD Minister Smriti Irani on Saturday said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X