For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 மாதத்திற்கு டெல்லியில் இருக்க கூடாது.. பீம் ஆர்மி ஆசாத்திற்கு டெல்லி கோர்ட் ஜாமீன்.. விடுதலை!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடந்த போராட்டங்களை பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தீவிரயமாக நடத்தி வந்தார். டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி இவர் போராட்டம் நடத்தினார்.

 Bhim Army Chandrashekar Azad gets bail with several conditions from Delhi Court

இந்த போராட்டம் அமைதியாக நடைபெற்ற நிலையிலும் போலீசார் இவரை கைது செய்தனர். அப்போதில் இருந்து சந்திரசேகர் ஆசாத், ஜாமீன் பெற முயன்று வந்தார். இவர் ஜாமீன் மீதான வழக்கு இன்று டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

சந்திரசேகர் ஆசாத் தற்போது மோசமான உடல்நிலையில் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் தீவிரமாக சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் இவர் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி காமினி லாவ் விசாரித்தார்.

காஷ்மீர் பனிச்சரிவு.. பனியில் சறுக்கி பாக். எல்லையில் விழுந்த இந்திய ராணுவ வீரர்.. தேடுதல் வேட்டை!காஷ்மீர் பனிச்சரிவு.. பனியில் சறுக்கி பாக். எல்லையில் விழுந்த இந்திய ராணுவ வீரர்.. தேடுதல் வேட்டை!

இந்த வழக்கில் நேற்றே அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். சந்திரசேகர் ஆசாத் மக்களை தர்ணா செய்ய அழைத்துள்ளார். மக்களை இப்படி தர்ணா செய்ய அழைப்பதில் என்ன தவறு. போராட்டம் செய்தால் தவறா? போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை அரசு தடுக்க நினைக்க கூடாது. அதற்கு எதிராக கைது செய்ய கூடாது என்று கூறினார்.

இன்றும் நீதிபதி அரசு தரப்பி சரமாரி கேள்வி எழுப்பினார். சந்திரசேகர அசாத் கலவரம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவரின் சமூக வலைதள போஸ்ட் எதுவும் வன்முறையை தூண்டும் வகையில் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இவரை கைது செய்ததற்காக போலீசை நீதிபதி கண்டித்தார். இந்த நிலையில் இறுதியில் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16 வரை அவர் எங்கும் போராட்டம் செய்ய கூடாது. அதேபோல் பிப்ரவரி 16 வரை அவர் டெல்லிக்கு வர கூடாது. டெல்லி தேர்தலுக்கு இடைஞ்சல் விளைவிக்க கூடாது. அவர் 25 ஆயிரம் ரூபாய் பிணை தொகை செலுத்த வேண்டும்.

வன்முறையை தூண்டும் வகையில் எதையும் போஸ்ட் செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல் இவரை உத்தர பிரதேசத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நாளைக்குள் ஒரே ஒரு முறை இவர் டெல்லி ஜம்மா மசூதி சென்று அங்கு மரியாதை செய்யலாம்.

அதன்பின் அவர் டெல்லியில் இருக்க கூடாது. உத்தர பிரதேசத்தில்தான் இருக்க வேண்டும் என்று நீதிபதி காமினி உத்தரவிட்டுள்ளார்.

English summary
Bhim Army Chandrashekar Azad gets bail with several conditions from Delhi Court today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X