For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போபால் போலி என்கவுண்டரில் தொடர்புடைய அனைவரையும் தூக்கிலிட வேண்டும்- கட்ஜூ காட்டம்

போபாலில் 8 சிமி தீவிரவாதிகள் போலி என்கவுண்ட்டரில்தான் கொல்லப்பட்டனர் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ காட்டமாக தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: போபாலில் 8 சிமி தீவிரவாதிகள் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் தொடர்புடைய அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கட்ஜூ காட்டமாக கூறியுள்ளார்.

Bhopal encounter was fake, says Katju

போபால் சிறையில் சிறைக் காவலரை கொன்றுவிட்டு 8 சிமி தீவிரவாதிகள் தப்பியதாக கூறப்பட்டது. அவர்கள் தப்பிய 8 மணிநேரத்தில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை. இதனால் போலி என்கவுண்ட்டரில்தான் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனரா என்ற சர்ச்சை வெடித்தது.

இதனிடையே ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, இது போலி என்கவுண்ட்டர்தான் என சாடியுள்ளார். அத்துடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் என்றும் அவர் தம்முடைய சமூக வலைதள பக்கங்களில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Former SC judge Justice Markandey Katju has said that he reckoned the encounter that killed 8 undertrials in Madhya Pradesh on Monday was fake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X