For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் துணி எனக்கு வேணும்.. "உழைப்பாளி" ரஜினி போல்.. போலீஸிடம் போய் மல்லுகட்டிய கிருஷ்ண குமார் துபே!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பேண்ட்டுக்கு பதிலாக அரை டிரவுசர் தைத்து கொடுத்த டெய்லர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி டிரவுசரை எடுத்துக் கொண்ட ஒருவர் வந்த சம்பவம் போலீஸாரிடையே நகைப்பை ஏற்படுத்தியது.

போபாலை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் துபே (46). இவர் அங்குள்ள ஒரு டெய்லரிடம் 2 மீட்டர் துணியை கொடுத்து தனக்கு நீளமான முழு பேன்ட் தைத்து கொடுக்குமாறு அளவு கொடுத்தார்.

பின்னர் கடைக்காரர் சொன்ன தேதியில் சென்று துணியை டெலிவரி வாங்க சென்றார். 70 ரூபாய் கொடுத்து தைத்த துணியை வாங்கி கொண்டு வீட்டில் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

எதிர்க்கட்சியை ஆளும் கட்சி பாராட்றதும்.. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி புகழ்வதும்.. குட் பாலிட்டிக்ஸ்! எதிர்க்கட்சியை ஆளும் கட்சி பாராட்றதும்.. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி புகழ்வதும்.. குட் பாலிட்டிக்ஸ்!

அரைக்கால் டிரவுசர்

அரைக்கால் டிரவுசர்

அதாவது பேன்ட்டுக்கு பதிலாக அரைக்கால் டிரவுசரை டெய்லர் தைத்துவிட்டார். உடனே ஆத்திரம் அடைந்த துபே டெய்லர் கடைக்கு மீண்டும் சென்றுள்ளார். அப்போது அங்கு நான் 2 மீட்டர் துணி கொடுத்து பேன்ட் தைக்க சொன்னால் இப்படி அரை டிரவுசர் தைத்துள்ளீர்களே. மாற்றி தைத்துக் கொடுங்கள் என கேட்டுள்ளார் துபே.

துணி

துணி

அதற்கு டெய்லரோ அதெல்லாம் மாற்றி தைக்க முடியாது என சொல்லிவிட்டார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம். துணியை அந்த ஆள் முகத்தில் எறிந்து நீயே வைத்துக் கொள் என சொல்லியிருப்போம். அவரின் கடை வியாபாரத்தை கெடுக்கும் படி வாசலில் நின்று கத்தி விட்டு வந்திருப்போம். அங்கு கடைக்கு வந்தவர்களிடம் இந்த டெய்லரிடம் துணி தைக்காதீர் என சொல்லியிருப்போம்.

போலீஸ் நிலையம்

போலீஸ் நிலையம்

ஆனால் துபே என்ன செய்தார் தெரியுமா. நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு கையில் இருந்த டிரவுசரை காண்பித்து, சார் நான் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தேன். தற்போது கொரோனா லாக்டவுனால் எனது பணியை இழந்துவிட்டேன். இதனால் அன்றாட செலவுகளுக்கே போராடி வருகிறேன்.

போலீஸார்

போலீஸார்

இந்த நிலையில் அண்மையில் எனது நண்பரிடம் இருந்து ரூ 1000 கடனாக பெற்று வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி போட்டேன். அந்த பணத்தில் எனது பேன்ட் கிழிந்திருந்ததால் புதியத் துணியை வாங்கி அதை பேன்ட்டாக தைக்க டெய்லரிடம் சென்றால் அவர் அரைக்கால் டவுஸராக தைத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார். இதையே ஏற்ற போலீஸார் உள்ளூர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினார்கள்.

English summary
Bhopal man went to police station with his underwear to take action against tailor who stiched instead of long underwear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X