For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்!

Google Oneindia Tamil News

போபால்: பிரதமர் நரேந்திர மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அடம்பிடித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    பிரதமர் மோடியை வர சொல்லுங்க.. அப்போ தான் தடுப்பூசி போட்டுப்பேன்.... ம.பி-யில் அடம்பிடித்த நபர்!

    உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா எனும் வைரஸால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பல்வேறு நாடுகளில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையை இழந்துள்ளனர். ஊதிய குறைப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

    உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம் உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்

    இந்த நிலையில் கொரோனா சங்கிலியை முழுவதுமாக உடைக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என மருத்துவ நிபுணர்கள் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

    வேறு நாடுகள்

    வேறு நாடுகள்

    அது போல் சில நாடுகள் வேறு நாடுகளிடமிருந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டு தங்கள் நாட்டின் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்கள் கூடும் பொது இடங்களில் வைத்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 ஆவது அலையின் போது தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

    இரண்டாவது அலை

    இரண்டாவது அலை

    இதனால் பாதிப்புகள் அதிகரித்தன. ஆனால் இரண்டாவது அலையின் உயிரிழப்புகள், பாதிப்புகளை மனதில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார்கள். காலையில் போடும் தடுப்பூசிக்கு அதிகாலையிலேயே வரிசையில் நிற்கும் அளவுக்கு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    பழங்குடியினர்

    பழங்குடியினர்

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் வசிக்கும் தார் மாவட்டத்தில் கிர்கார்வாஸ் எனும் கிராமத்திற்கு மருத்துவ அதிகாரிகள் சென்றனர். அங்கு ஒரு தம்பதியை தவிர்த்து அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ ஊழியர்கள் அந்த தம்பதியிடம் சென்று முதல் தவணை ஊசியை போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

    ஆட்சியர்

    ஆட்சியர்

    ஆனால் அவர்கள் பிடிவாதம் பிடித்தனர். நாங்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றால் பெரிய அதிகாரிகள் வர வேண்டும் என அடம்பிடித்தனர். அதிலும் கணவர் மட்டும் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை வர சொல்லலாமா என கேட்டார்கள். ஆனால் அவரோ பிரதமர் நரேந்திர மோடி தான் வர வேண்டும். அவர் முன்புதான் ஊசி போட்டுக் கொள்வேன் என அடம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அவர்களுக்கு விளக்கினர். எனினும் அவர் பிடித்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால் மருத்துவ ஊழியர்கள் ஏமாற்றுடன் திரும்பி சென்றனர்.

    English summary
    Madhya Pradesh man demands as PM Modi should present when he is doing vaccination.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X