For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் குழப்பம் தீர்ந்தது.. சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு!

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

சட்டீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான 15 வருட ஆட்சியை காங்கிரஸ் அகற்றி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 90 இடங்களில் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 5 தொகுதிகளில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

 பெரும் திணறல்

பெரும் திணறல்

ஆனால் கடந்த 4 நாட்களாக அங்கு காங்கிரஸ் கட்சி முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வந்தது. சட்டீஸ்கரில் தம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முதல்வர் போட்டியில் இருந்தனர்.

4 பேரில் தனி ஒருவனாக திகழ்ந்து முதல்வராக தேர்வு.. யார் இந்த பூபேஷ் பாகல்? 4 பேரில் தனி ஒருவனாக திகழ்ந்து முதல்வராக தேர்வு.. யார் இந்த பூபேஷ் பாகல்?

 முக்கியமான நபர்கள்

முக்கியமான நபர்கள்

மூன்று பேரும் முக்கியமான நபர்கள் என்பதால் யாரை தேர்வது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் குழம்பியது. அதேபோல் உறுப்பினர்கள் ஆதரவும் மூன்று பேருக்கும் கிட்டத்தட்ட சமமாக இருந்தது. அங்கு முதல்வரை தேர்வு செய்ய நான்கு முறையும் மேல் கூட்டம் நடத்தப்பட்டது.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அதன்பின் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் செய்யப்பட்டது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் முடிவு ஒப்படைக்கப்பட்டது. ராகுல் காந்தி சட்டீஸ்கர் முதல்வரை தேர்வு செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் ராகுல் காந்தி ம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோரை அழைத்து இரண்டு முறை சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

 முதல்வர்

முதல்வர்

இந்த நிலையில் தற்போது சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் என்று பதவி ஏற்பார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 15 வருடத்திற்கு பின் சட்டீஸ்கரில் ஆட்சி செய்ய போகும் காங்கிரஸ் முதல்வர் என்று பெருமையை பூபேஷ் பாகல் பெறுகிறார். அவரது ஆதரவாளர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.

English summary
Bhupesh Baghel to be the Chief Minister of Chhattisgarh announces Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X