For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக்பாஸ் vs சோட்டா பீம்... காங்கிரஸ், பாஜக ட்விட்டரில் அக்கப்போரு!

பிரதமர் நரேந்திரமோடியின் நமோ செயலி பிக்பாஸ் போல இந்தியர்களை உளவு பார்ப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதற்கு பாஜகவின் ஸ்மிருதி இரானி சோட்டா பீமை சுட்டிகாட்டி பதில் ட்வீட் போட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் செயலி பிக்பாஸ் போல உளவுபார்த்து தகவல்கள் திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் போட்ட கருத்தால் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே டுவிட்டர் போர் தீவிரமாக நடந்து வருகிறது.

முகநூல் பக்கம் மூலம் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு வெவ்வேறு கருத்துகளை பதிவிட்டிருந்தார். பிரதமரின் நமோ செயலி மக்களை வேவு பார்ப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.

முதலாவது ட்வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் நமோ ஆப், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் ஆடியோ, வீடியோ, தொடர்புகளை ரகசியமாக பதிவு செய்கிறது. இந்தியர்களை உளவு பார்க்கும் 'பிக்பாஸை' போல் இருந்து வருகிறார் மோடி.

என்சிசி மாணவர்கள் விவரம் சேகரிப்பு

என்சிசி மாணவர்கள் விவரம் சேகரிப்பு

தற்போது பிரதமர் நமது குழந்தைகள் பற்றிய விபரங்களை பெற நினைக்கிறார். 13 லட்சம் என்சிசி மாணவர்களை வலுக்கட்டாயமாக நமோ செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர் என்றும் ராகுல் குற்றம்சாட்டி இருந்தார்.

மோடிக்கு சொந்தமானதல்ல

மோடி தனது பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தி நமோ செயலியை அரசு உதவியுடன் பிரபலப்படுத்துகிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களின் தகவல்களை சேகரித்து வருகிறார். ஒரு பிரதமராக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டு மக்களை தொடர்பு கொள்ள நினைத்தால் அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்தி வருகிறார். இந்த விவரங்கள் இந்தியாவிற்கு சொந்தமானது, மோடிக்கு சொந்தமானது அல்ல என்று ராகுல் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மிருதி இரானி கேலி

பிரதமர் நரேந்திர மோடியின் நமோ -பின் மீது குற்றம் சாட்டியதற்காக ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டுவிட்டரில் கேலி செய்துள்ளார். ஸ்மிருதி இரானி தனது பதிவில் வேவு பார்பதற்காக நமோ செயலியில் எந்த விதமான வழிவகையும் செய்யப்படவில்லை என்று சோட்டா பீம் கார்டூன் கதாபாத்திரத்திற்குக் கூட தெரியும் என்று ராகுலை விமர்சித்துள்ளார்.

பாஜக, காங்கிரஸ் இடையே ட்விட்டர் போர்

பாஜக, காங்கிரஸ் இடையே ட்விட்டர் போர்

ராகுல்காந்தியின் பிக்பாஸ் கமென்ட்டுக்கு, ஸ்மிருதி இரானி சோட்டா பீம் கேரக்டரை மேற்கோள் காட்டி பதில் பதிவிட்டிருந்தார். இதனால் இன்று காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே டுவிட்டர் போர் தீவிரமாக இருந்தது.

English summary
Central minister Smiriti Irani jibes Congress president Rahulgandhi for his Big boss comment over PM Narendra modi and his app Namo Narayana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X