For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்கண்ட் உள்ளாட்சி மன்ற தேர்தல்.. முத்திரை பதித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ரஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், மக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக ஆதரவளித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிந்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களப்பணியாற்றியது.கிரிடி மாநகராட்சியில் 6 இடங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.

Big thumbs up Indian Union Muslim League party in Jharkhand election

கிரிடி மாநகராட்சி 4 வது வார்டில் முஸ்தபா மிர்ஷா, 5 வது வார்டில் நூர் முஹம்மது, 7 வது வார்டில் நாச்சியா பர்வின், 8வது வார்டில் உபைத்துல்லாஹ், 19வது வார்டில் நஜ்மா காத்தூன், 27வது வார்டில் சைபுல்லாஹ் ஆகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.மதுப்பூர் நகராட்சியில் 2 இடங்களை முஸ்லிம் லீக் கைப்பற்றி உள்ளது

மதுப்பூர் நகராட்சியில் 14வது வார்டில் ரோஹிபர்வின் மற்றும் 20 வது வார்டில் ஜனோபர் யாஸ்மின் ஆகிய இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர். ராம்கார் நகராட்சி 10 வது வார்டில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் இந்தர் தேவ் ராம் என்ற சகோதர சமுதாயச் சார்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.

மேயர் மற்றும் துணை மேயர் பதவி களுக்கு போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் கணிசமான வாக்கு களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வந்த சமூக நலப்பணிகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

English summary
Big thumbs up Indian Union Muslim League party in Jharkhand election comparing to the last election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X