For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகா கூட்டணி உடைந்த பிறகு மோடியுடன் முதல் சந்திப்பு.. பாட்னாவில் ரோஸ் கொடுத்த நிதிஷ்!

பீஹாரில் மகா கூட்டணி உடைந்த பின்னர் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதிஷ்குமார் முதல்முறையாக சந்தித்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

பாட்னா : பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காக பாட்னா வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் நிதிஷ்குமார் சிகப்பு நிற ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றார். மகா கூட்டணி உடைந்து பாஜக கூட்டணியில் பீஹாரில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி விலகாததை அடுத்து முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் பீஹார் மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 Bihar CM Nithish welcomes PM Modia at Patna after the new alliance

இந்நிலையில் மகா கூட்டணி உடைந்து பாஜகவுடன் நிதிஷ் கைகோர்த்த பிறகு பிரதமர் நரேந்திரமோடி முதன்முறையாக இன்று பாட்னா சென்றார். விமான நிலையத்தில் முதல்வர் நிதிஷ்குமார் நரேந்திர மோடிக்கு சகிப்பு நிற ரோஜா மலர் கொடுத்து வரவேற்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து பாட்னா பல்கலைக்கழகம் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

 Bihar CM Nithish welcomes PM Modia at Patna after the new alliance

அப்போது அவர் பீஹாரில் நிதிஷ்குமார் தலைமையில் சிறப்பான பாராட்டத்தக்க முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார். 2022ம் ஆண்டிற்குள் பீஹார் நிச்சயம் வளர்ச்சி நிலையை அடைந்துவிடும் என்றும் மோடி தெரிவித்தார்.

எல்லா மாநிலங்களிலும் உயர் நிலையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியை எடுத்துக்கொண்டால் அவர் நிச்சயம் பாட்னா பல்கலைக்கழகத்தில் படித்தவராக இருப்பார். நம்முடைய இளைஞர்கள் நாட்டிற்காகவும், உலகிற்காகவும் ஏராளமான விஷயங்களை செய்ய காத்திருக்கின்றனர்.

புதிய ஸ்டார்ட் அப் சிந்தனைகள் மூலம் சமூதாயத்திற்கு இளைஞர்களால் பல நல்ல காரியங்களை செய்ய முடியும். நாட்டில் உயர்கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 தனியார் மற்றும் 10 பொது பல்கலைக்கழகங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி அளிக்கப்படம். இதன் மூலம் உயர்கல்வி வளர்ச்சியில் உலக அளவில் போட்டியிட முடியும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

English summary
PM Narendra modi announced at Patna university function that top 10 private and top 10 public universities will be given Rs. 10,000 crore in the next five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X