For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் டிக்கெட்டிற்கு ரூ.5 இல்லாமல் அல்லாடிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்: உதவிய அரசு அதிகாரி

By Siva
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ.5 கடன் வாங்கி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைநகர் பாட்னாவில் புதிய பேருந்துகளை புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேருந்தின் உள்புறம் எப்படி உள்ளது என்பதை பார்க்க ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

Bihar CM Nitish Kumar borrows Rs 5 to travel in city bus

அவர் பாட்னா பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி மைதானத்திற்கு சென்றார். பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பெண் கண்டக்டர் வந்து நிதிஷிடம் ரூ.5க்கான டிக்கெட்டை அளித்தார்.

டிக்கெட்டை வாங்கிய நிதிஷ் தனது ஆடையில் உள்ள பாக்கெட்டுகளில் தேடிப் பார்த்தபோது தான் அவரிடம் பணமே இல்லை என்பது அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் தன்னுடன் வந்திருந்த அரசு உயர் அதிகாரி ஒருவரிடம் ரூ.5 கடன் வாங்கி கண்டக்டரிடம் அளித்தார்.

ஊரக மேம்பாட்டு துறை தலைமை செயலாளர் அம்ரித் லால் மீனா தான் நிதிஷுக்கு ரூ.5 கடன் கொடுத்த அதிகாரி.

English summary
Bihar CM Nitish Kumar found himself in an awkward situation as he boarded a city bus in Patna without money to buy ticket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X