For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் மோசமான ஆட்சியை வழங்கும் பீகார்.. அதிர்ச்சி அளிக்கும் பட்டியல் வெளியானது!

இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் பீகார் கடைசி இடத்தை பெற்று இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் பீகார் கடைசி இடத்தை பெற்று இருக்கிறது.

இதில் முதல் இடத்தில் கேரளா மாநிலம் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. பொது விவகார மையம் எனப்படும் பப்ளிக் அஃபயர்ஸ் செண்டர் இந்தியா இந்தியாவில் சிறந்த ஆட்சியைய் தரும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பெங்களூரை சேர்ந்த அமைப்புதான் இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி வழங்குவதற்கும், திட்டங்களை மக்களை சென்று சேர்வதற்கும் இந்த நிறுவனம் ஆலோசனை வழங்கி வருகிறது.

பின்னால்

பின்னால்

இந்த பட்டியலில் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி , ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீரும் இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

மோசமான இடம்

மோசமான இடம்

இதில் மிகவும் மோசமான இடத்தை எப்போதும் போல பீகார் பெற்று இருக்கிறது. இதற்கு முன்பாக மூன்று வருடம் வெளியான பட்டயலிலும் பீகார் மோசமான இடத்தையே பெற்று இருந்தது. இந்த முறை பீகார் மிக மோசமாக கடைசி இடத்தை அடைத்து இருக்கிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு பல காரணம் சொல்லப்படுகிறது. மாநில அரசின் திட்டங்கள் எதுவும் மக்களுக்கு சரியாக சென்று சேரவில்லை. அதேபோல், மாநில அரசு மக்களுக்காக புதிய சட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. மேலும் அவசர காலங்களில், மக்களுக்கு அரசு உறுதுணையாக செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அரசு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

தேர்வு எப்படி

தேர்வு எப்படி

அனைத்து மாநிலங்களிலும் நேரடியாக இதற்காக ஆராய்ச்சி செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட விஷயங்களை ஆராய்ச்சி செய்துள்ளனர். அரசு மக்களுடன் எப்படி தொடர்பில் இருக்கிறது. அரசின் திட்டங்கள் மக்களிடம் எப்படி சென்று சேர்கிறது. மக்களை அரசு எப்படி நடத்துகிறது என்பதை இதில் கருத்தில் கொண்டுள்ளனர்.

English summary
Bihar gets the last position in best governing state list created by PAC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X