For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி படத்தை செருப்பல் அடிக்கச் சொன்ன பீகார் அமைச்சர்... நிதிஷ் கண்டனம்!

பிரதமர் மோடியின் படத்தை செருப்பால் அடிக்கச் சொன்ன பீகார் அமைச்சருக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளது.

By Vazhmuni
Google Oneindia Tamil News

பாட்னா: பிரதமர் மோடியின் படத்தை செருப்பால் அடிக்கச் சொன்ன பீகார் கலால் துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தானுக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளது. இந்த சர்சைக்குரிய கருத்துக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஜன் வேதனா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பீகார் கலால் துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தான் கலந்துகொண்டார்.

Bihar minister asks crowd to beat PM Modi's photo with slippers

அப்போது பேசிய அவர், பணமதிப்பிழப்பு செய்ததால் பிரதமர் மோடியை வழிப்பறிக் கொள்ளையர் எனும் அவரது படத்தை செருப்பால் அடிக்க வேண்டும் என பேசினார். இதைக் கேட்ட தொண்டர் ஒருவர் கையில் வைத்திருந்த மோடியின் புகைப்படத்தை செருப்பால் அடித்தார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மஸ்தானின் சர்சைக்குரிய கருத்துக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திலையில் மஸ்தான், தமது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

ஆனால் பாஜகவோ, மஸ்தான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எழுப்புவோம் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.

English summary
Bihar's minister for excise and prohibition Abdul Jalil Mastan has kicked up a controversy after his video abusing Prime Minister Narendra modi and calling him a dacoit went viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X