For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் பாஜக-16-24, ஐ.ஜனதா தளம்: 7-13, ஆர்ஜேடி 6-10, காங். 0-4 இடங்கள் கைப்பற்றும்: கருத்து கணிப்பு

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா 16 முதல் 24 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று ஐபிஎன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதாவுக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 0-4 இடங்கள் மட்டும்தான் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது ஐபிஎன் கருத்து கணிப்பு

கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் பீகாரில் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? என்ற கேள்விக்கு பாஜக: 16-24, ஐக்கிய ஜனதா தளம்: 7-13, ராஷ்டிரிய ஜனதா தளம்: 6-10, காங்கிரஸ்:0-4 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த கட்சிக்கு எத்தனை வாக்கு சதவீதம்?

எந்த கட்சிக்கு எத்தனை வாக்கு சதவீதம்?

தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் கட்சிகளுக்கு கிடைக்கு வாக்கு சதவீதம்

காங்கிரஸ்- 11%. பாஜக -39%. ஐக்கிய ஜனதா தளம் -20%. ராஷ்டிரிய ஜனதா தளம்-15%, லோக்ஜனசக்தி-2%, ஆம் ஆத்மி-3% வாக்குகள் கிடைக்குமாம்.

பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால்?

பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால்?

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம்

ஐக்கிய ஜனதா தளம்- 38%, ராஷ்டிரிய ஜனதா தளம்-23%,. பாஜக-23%, காங்கிரஸ்- 4%,. லோக்ஜனசக்தி- 3% வாக்குகள் கிடைக்குமாம்.

பீகார் முதல்வர் பற்றி..

பீகார் முதல்வர் பற்றி..

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் செயல்பாடுகள் பற்றி? என்ற கேள்விக்கு 63% பேர் திருப்தி அளிப்பதாக கூறியுள்ளனர். 36% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் செயல்பாடு குறித்து

மத்திய அரசின் செயல்பாடு குறித்து

மத்திய அரசின் செயல்பாடு குறித்து பீகார் மாநில மக்களில் 77% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 17% பேர் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங் செயல்பாடு குறித்து

பிரதமர் மன்மோகன்சிங் செயல்பாடு குறித்து

பிரதமர் மன்மோகன்சிங்கின் செயல்பாடு குறித்து பீகார் மாநில மக்களில் 70% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 24% மட்டுமே திருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் பிரதமராக யாருக்கு ஆதரவு?

நாட்டின் பிரதமராக யாருக்கு ஆதரவு?

பிரதமர் பதவிக்கு யாருக்கு பீகார் மாநில மக்களின் ஆதரவு என்ற கேள்விக்கு

மோடி-39%. ராகுல்- 9%, சோனியா-3%. மன்மோகன்சிங், அத்வானி- தலா 1%. நிதீஷ்குமார்-15%, லாலு பிரசாத்-11%, ராம்விலாஸ் பஸ்வான், கேஜ்ரிவால் ஆகியோருக்கு தலா 3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
Even though the BJP is the most preferred in the Lok Sabha polls, voters still back the JDU in the event of Assembly elections.
 
 The break-up with the Bharatiya Janata Party (BJP) in June 2013 seems to have gone against Chief Minister Nitish Kumar and his party the Janata Dal (United). With the Narendra Modi wave sweeping the state, the JD(U) is likely to come a distant second to the BJP if Lok Sabha elections are held in January 2014 as per the Lokniti-IBN National Tracker poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X