For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார் பந்தய டிராக்கில் அத்துமீறி நுழைந்த பைக்.. 3 பேர் பலியான கொடூரம்.. பிரபல வீரருக்கு காயம்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: கார் பந்தயம் நடந்த போது உள்ளே பைக் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டனர்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளம் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற பெயரில் 6 சுற்றுகளாக கார் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் முதல் 2 சுற்று சென்னை மற்றும் கோவையில் நடந்தது.

மூன்றாவது சுற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மரில் நேற்றைய தினம் நடந்தது. இந்த பந்தயம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்புராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு

6 முறை சாம்பியன்

6 முறை சாம்பியன்

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் 6 முறை சாம்பியனான கவுரவ் கில் பங்கேற்றார். 145 கிலோ மீட்டர் வேகத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்தார். அப்போது நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு 200 மீட்டர் தூரத்துக்கு முன்னர் பந்தயம் நடக்கும் சாலைக்குள் ஒரு பைக்கானது சிக்னலை மீறி நுழைந்துவிட்டது.

தூக்கி

தூக்கி

அந்த சமயத்தில் கவுரவின் கார் வேகமாக வந்ததால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பைக் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அதே பகுதியச் சேர்ந்த நரேந்திரா, அவரது மனைவி புஷ்பா, மகன் ஜிதேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

பந்தயம்

பந்தயம்

இதையடுத்து அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரும் விபத்தில் சிக்கியதால் அதை ஓட்டிய கவுரவ் பலத்த காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பந்தயம் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது.

காரை நிறுத்த

காரை நிறுத்த

இந்த விபத்து குறித்து ரேஸ் ஏற்பாட்டாளர்கள் கூறுகையில் கார் பந்தயத்தால் இந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தோம். பைக்கில் வந்த நரேந்திரா, பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துவிட்டு தடுப்பை மீறி உள்ளே நுழைந்தார். இதனால்தான் விபத்து நேரிட்டது. கவுரவ் கில் காரை நிறுத்த முயற்சித்தும் முடியவில்லை என்றனர்.

English summary
Bike rammed into Car race path and 3 who was travelling in the bike died in the spot in Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X