For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவுக்கு அடுத்து தீயாக பரவும் பறவை காய்ச்சல்... உஷார் நிலையில் மத்திய மாநில அரசுகள்

Google Oneindia Tamil News

இந்தூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் காகங்கள் திடீரென கொத்து, கொத்தாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர்.

அப்பகுதியில் இருக்கும் காகங்களில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே பறவைகள் உயிரிழப்பதாகவும் நகராட்சி சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதன்மை செயலாளர் குஞ்சி லால் மீனா, மாநிலத்தின் பல பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன என்றார். மேலும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Bird flu virus detected in scores of dead crows, Centre issues alert to states over fatal spread

கிங்பிஷர்கள், மாக்பீஸ் போன்ற பறவைகளும் இதனால் உயிரிழந்துள்ளதாகக் கூறிய மீனா, இதற்காக ஜலவர் பகுதியில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கரூரில் மாஸ் காட்டிய செந்தில்பாலாஜி... பிரம்மாண்டமான மக்கள் கிராம சபைக் கூட்டம்.. ஸ்டாலின் உற்சாகம்கரூரில் மாஸ் காட்டிய செந்தில்பாலாஜி... பிரம்மாண்டமான மக்கள் கிராம சபைக் கூட்டம்.. ஸ்டாலின் உற்சாகம்

அதேபோல மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள ஒரு கல்லூரியில் சுமார் 50 காகங்களில் திடீரென்று உயிரிழந்து கிடந்தன. உயிரிழந்த காகங்களை போபாலிலுள்ள சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்திய போது, அவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பூர்ணிமா கடரியா கூறினார்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் ஊஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சல் இறப்புக்கள் பதிவாகும் பகுதிகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

English summary
The central government has also issued an alert to the states, saying that samples need to be collected from areas where bird flu deaths are being reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X