For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் புகாரில் கைதான கேரள பிஷப் பிராங்கோவுக்கு 24ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடி!

கன்னியாஸ்திரியின் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிஷப் பிரோங்கோ திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரள பிஷப் பிராங்கோவுக்கு 24ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடி!- வீடியோ

    திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியின் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிஷப் பிரோங்கோவுக்கு 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பலமுறை பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.

    10 நாட்கள் விசாரணை

    10 நாட்கள் விசாரணை

    இதைத்தொடர்ந்து பிஷப்பை பதவி நீக்கக்கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 10 நாட்களாக பிஷப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

    வாடிகன் சபை அதிரடி

    வாடிகன் சபை அதிரடி

    பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கிடையே, தொடர்ந்து நேற்றும் பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பிஷப் பிராங்கோ கைது

    பிஷப் பிராங்கோ கைது

    விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    திடீர் நெஞ்சுவலி

    செல்லும் வழியில் பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    24ஆம் தேதி வரை காவல்

    24ஆம் தேதி வரை காவல்

    இதையடுத்து கோட்டயம் நீதிமன்றத்தில் பிஷப் முலக்கல் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 24ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம் 24ம் தேதி பிற்பகல் மீண்டும் அவரை கோர்டடில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Bishop Franco has been admited in hospital due to chest pain. Franco arrested yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X