For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே.வங்கத்தில் பண்டிகைகள், விழாக்களை முன்னிட்டு இடைவெளிவிட்டு விட்டு முழு லாக்டவுன் அமல்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பண்டிகைகள் மற்றும் விழாக்களை முன்னிட்டு முழு லாக்டவுன் சில நாட்கள் இடைவெளி விட்டு விட்டு அமல்படுத்தப்பட உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் 62,964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் மொத்தம் 1,449 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Biweekly lockdown in West Bengal

கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 31-ந் தேதி வரை ஏற்கனவே லாக்டவுன் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடிமேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடி

வாரத்துக்கு 2 நாட்கள் முழுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். பொதுவாக சனி, ஞாயிறுகளில் இந்த முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் இந்த நாட்களில் பண்டிகைகள், விழாக்கள் வந்தால் வார நாட்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் மமதாபானர்ஜி கூறியுள்ளார்.

அதிஉச்சபட்சம்-ஆந்திராவில் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா- இந்தியாவில் 15 லட்சத்தை கடந்தது பாதிப்புஅதிஉச்சபட்சம்-ஆந்திராவில் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா- இந்தியாவில் 15 லட்சத்தை கடந்தது பாதிப்பு

இதனடிப்படையில் மேற்கு வங்கத்தில் ஜூலை 29 (புதன்கிழமை), ஆகஸ்ட் 2 (ஞாயிறு), ஆக. 5 (புதன்), ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை), ஆகஸ்ட் 9 (ஞாயிறு), ஆகஸ்ட் 16 (ஞாயிறு), ஆக. 17 (திங்கள்கிழமை), ஆக. 23 (ஞாயிறு), ஆக. 24 (திங்கள்), ஆக. 31 (திங்கள்கிழமை) லாக்டவுன் அமல்படுத்தப்படும்.

ஆகஸ்ட் 1-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்று லாக்டவுன் அமல்படுத்தப்படவில்லை என்றார் மமதா பானர்ஜி. இதனிடையே பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 9 லாக்டவுனும் கைவிடப்படும் என்றும் மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee announced an extension of the biweekly lockdown till August 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X