For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்

Google Oneindia Tamil News

வயநாடு: நாட்டின் பொருளாதாரத்தையே பிரதமர் நரேந்திர மோடி சீர்குலைத்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

கேரளாவின் கோழிக்கோடு- மைசூரு- கொள்ளேகால் தேசிய நெடுஞ்சாலை எண் 766 பந்திப்பூர் புலிகள் சரணாலயம் வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலையானது கேரளாவின் வயநாடு- கோழிக்கோடு மாவட்டங்களின் இடையேயும் செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

BJP and PM Modi destroyed Economy, says Rahul Gandhi

இத்தடைக்கு எதிராக வயநாடு பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வயநாட்டில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அத்தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் மிகப் பெரிய பலமே பொருளாதாரம்தான். தற்போது பாஜகவும் பிரதமர் மோடியும் இந்த பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டனர்.

வெளியே வர போகிறாராம் சசிகலா.. மார்ச் மாதம் ரிலீஸ் என பரபர தகவல்.. வந்ததும் என்ன நடக்கும்?வெளியே வர போகிறாராம் சசிகலா.. மார்ச் மாதம் ரிலீஸ் என பரபர தகவல்.. வந்ததும் என்ன நடக்கும்?

நாட்டின் பொருளாதாரத்தை ஏன் சீர்குலைத்தனர் என்பதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்? நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மையை ஏன் உருவாக்கினீர்கள்? என்பதற்கும் மோடி பதிலளிக்க வேண்டும் என்றார். முன்னதாக தாம் வயநாட்டில் பயணம் மேற்கொன்டிருப்பது குறித்து ட்விட்டர் பக்கத்திலும் ராகுல் பதிவிட்டிருந்தார்.

English summary
Former Congress President Rahul Gandhi said that PM Modi and BJP destroted the nation's Economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X