For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் தலைவர்ளுடன் கேஜ்ரிவால் சமரசம்: பா.ஜ.க குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

BJP attack on AAP govt
டெல்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்களை ஆம் ஆத்மி கட்சி பாதுகாத்து வருவதாக டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஹர்ஷ்வர்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷீலா தீக்சித் ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சிறைக்கு அனுப்பப் போவதாக ஆம் ஆத்மி கட்சி கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

பேரவைத் தலைவர் தேர்தலின்போது முதலமைச்சர் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது அவை மரபுகளை மீறும் செயலாகும் என ஹர்ஷ்வர்தன் விமர்சித்துள்ளார்.

பேரவை கூட்டத்தின் முதல் நாளன்று ஆம் ஆத்மி உறுப்பினர்கள், தங்கள் கட்சியின் தொப்பியை அணிந்து வந்தது அவையை அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர் குறை கூறியுள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகளை தண்டிப்பதாக தேர்தலின்போது வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால், ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரசுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டாரா? என்றும் ஹர்ஷ்வர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
AAP had made promises and vowed to fight corruption but today it entered into an alliance with corruption and compromised with its principles. The government being formed in Delhi is a betrayal to Delhi residents as they rejected corrupt Congress in 2013 Assembly elections," Delhi assembly opposite party leader Harsh Vardhan told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X