For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிங் மாஸ்டரான பாஜக.. மேற்குவங்கத்தில் 107 எம்எல்ஏ-க்கள் கட்சி தாவ ரெடி.. முகுல் ராய் தகவல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கர்நாடகம், கோவா மாநிலங்களை தொடர்ந்து அரசியல் சதுரங்கத்தில் மேற்குவங்கத்திலும் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்த பாஜக தயாராகி வருகிறது. அம்மாநிலத்தில் பிற கட்சிகளை சேர்ந்த சுமார் 107 எம்எல்ஏ-க்கள் விரைவில் தங்கள் கட்சியில் இணைவார்கள் என பாஜக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசியபாஜக மூத்த தலைவரான முகுல் ராய், மேற்குவங்க மாநிலத்தில் பாஜக-வை மேலும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். அதன் பின்னர் அவர் தெரிவித்த தகவல் தான் விறுவிறுப்பானது.

BJP became a Ring master .! 107 MLAs in West Bengal, ready to join party.. Mukul Roy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 107 எம்எல்ஏ-க்கள் தங்களது கட்சியில் சேரப்போவதாக பாரதிய ஜனதா தலைவர் முகுல் ராய் தெரிவித்தார். இருப்பினும் பிற கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் எப்போது பாஜக-வில் சேருவார்கள் என்பதை அவர் கூறவில்லை.

மேற்குவங்கத்தில் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநில பாஜக தலைமையுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் பாஜக-வில் சேரவிருக்கும் காங்கிரஸ், டிஎம்சி மற்றும் சிபிஎம் என அனைத்து எம்எல்ஏ-க்கள் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மோத வந்தால் முழுசா வீடு சேரமாட்டீங்க... பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி பிபின் ராவத் வார்னிங் மோத வந்தால் முழுசா வீடு சேரமாட்டீங்க... பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி பிபின் ராவத் வார்னிங்

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பாஜக-வின் ஆபரேஷன் தாமரை காரணமாகவே, கடுமையான அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக குறற்ம்சாட்டப்பட்டுள்ளது. பாஜக-வால் தான் தற்போது எம்எல்ஏ-க்கள் ராஜினாமா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, சபாநாயகருக்கு நெருக்கடி, பேரவையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதே போல கோவாவிலும் இரு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 10 பேரை தங்களது கட்சியில் வளைத்து போட்டது பாஜக. இதில் மூவருக்கு மாநில அமைச்சர் பதவி இன்று தான் வழங்கப்பட்டது.

மம்தாவின் கோட்டையாக கருதப்படும் மேற்குவங்கத்தில், மக்களவை தேர்தலின் போது எதிர்பார்க்காத அளவு தொகுதிகளை கைப்பற்றியது பாஜக. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் 107 பேர் தங்களது கட்சியில் இணைவார்கள் என பாஜக தரப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The BJP is preparing to carry out various action in the West in the political chess followed by the states of Karnataka and Goa. BJP said 107 MLAs from other parties will soon join their party in west bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X