For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை.. முதுகில் குத்திய பாஜக.. கொந்தளிப்பில் 'டார்ஜிலிங்'

கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைப்பதாக தேர்தலின் போது உறுதியளித்த பாஜக அதை நிறைவேற்றாமல் முதுகில் குத்தியதாக கொந்தளிக்கிறது டார்ஜிலிங்.

By Mathi
Google Oneindia Tamil News

டார்ஜிலிங்: லோக்சபா தேர்தலின் போது தனி மாநில கோரிக்கையை ஆதரிப்பதாக உறுதியளித்த பாஜக இப்போது அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் முதுகில் குத்துவதாக கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைக்கும் கட்சிகள் கொந்தளிக்கின்றன.

2014-ம் ஆண்டு டார்ஜிலிங்கில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் அலுவாலியா. அப்போது, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை குறித்து பரிசீலிப்போம் என்றார்.

பாஜகவுக்கு 43% வாக்குகள்

பாஜகவுக்கு 43% வாக்குகள்

இதனால் டார்ஜிலிங் லோக்சபா தொகுதியில் 43% வாக்குகளை அள்ளியது பாஜக. ஆனால் தேர்தலுக்குப் பின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக முன்வரவில்லை.

கண்டுகொள்ளாத பாஜக

கண்டுகொள்ளாத பாஜக

அண்மையில் டார்ஜிலிங்கில் போராட்டம் வெடித்த போது மமதா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு இப்போராட்டங்களை ஒடுக்கியது. ஆனாலும் பாஜகவோ கண்டுகொள்ளாமலேயே இருந்தது.

முதுகில் குத்தும் பாஜக

முதுகில் குத்தும் பாஜக

இது கூர்க்காலாந்து ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால்தான் மமதா பானர்ஜி எங்களை படுகொலை செய்கிறார்; பாஜகவோ எங்கள் முதுகில் குத்துகிறது; டார்ஜிலிங்கின் எம்பியாக இருக்க லாயக்கே இல்லாதவர் பாஜகவின் அலுவாலியா என கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பாஜக மறக்கும் தொகுதி

பாஜக மறக்கும் தொகுதி

பாஜகவை நம்பி வாக்களித்த மக்கள், இனி டார்ஜிலிங் தொகுதியில் அந்த கட்சியை தோற்கடிக்காமல் ஓயமாட்டார்கள் என்பதாகத்தான் தெரிகிறது. டார்ஜிலிங் தொகுதியை பாஜக மறந்துவிட வேண்டிய நிலையில்தான் களநிலவரமும் இருக்கிறது.

English summary
BJP becoming the BJP becomes Untouchable party in Darjeeling after not supporting to Gorkhaland state demand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X