For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இமாசல பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் - இந்தியா டுடே சர்வே

இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிம்லா: இமாசல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BJP big win in Himachal Pradesh : Opinion Poll

இமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் நவம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மொத்தமுள்ள 68 இடங்களில் 43 முதல் 47 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

BJP big win in Himachal Pradesh : Opinion Poll

ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 21 முதல் 25 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிற கட்சிக்கு 2 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

English summary
According to the poll, BJP will garner 43 to 47 of the total 68 seats in the Himachal Pradesh Assembly. As the majority mark is 35, BJP will easily romp home victorious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X