For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பியில் பாஜக வரலாறு காணாத வெற்றி... இனி ராமர் கோவில், மாட்டிறைச்சி தடை எல்லாம்..எல்லாமும் நடக்கும்!

உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றிவிட்டது பாஜக. இனி அயோத்தியில் ராமர் கோவில், மாட்டிறைச்சிக்கான தடை என அனைத்தும் அரங்கேறும்.

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள பாஜக அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவிலை கட்டும் என்றே தெரிகிறது.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமையுமா? தொங்கு சட்டசபை அமையுமா? என்ற யூகங்களை தகர்த்து வரலாறு காணாத விஸ்வரூப வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. ஆட்சி அமைக்கத் தேவையான 202 இடங்களைத் தாண்டி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

வியூகம்

வியூகம்

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்துவித வியூகங்களையும் செயல்படுத்திய பாஜக இப்போது சாதித்துவிட்டது. நல்ல காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என கூப்பாடு போடும் பாஜக.

300-க்கும் அதிகமான இடங்கள்

300-க்கும் அதிகமான இடங்கள்

இப்போது 300க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி அரியாசனத்தில் ஏறிவிட்டது பாஜக. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் ராமர் கோவிலை கட்டுவோம் என பிரகடனம் செய்தது பாஜக.

ராமர் கோவில்

ராமர் கோவில்

இப்போது அந்த கட்சியினர் நினைத்தது போலவே வெற்றி பெற்றுவிட்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியபடி இனி அயோத்தியில் ராமர் கோவில், உபியில் மாட்டிறைச்சி தடை என அனைத்துவித ஆட்டங்களையும் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேற்றத்தான் போகிறது.

சிறுபான்மையினர் அச்சம்

சிறுபான்மையினர் அச்சம்

உபி வியூகத்தை இனி பிற மாநிலங்களில் பாஜக படுதீவிரமாக செயல்படுத்தவே முயற்சிக்கும். பாஜகவின் இந்த படுபயங்கரமான வெற்றி சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
BJP will form the next government in UP and is crossing 300 seats. After this vicotry BJP will be built Ram Temple in Ayodhya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X