For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறும் 36 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: இந்தியாவிலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வித்தியாசமான பெருமையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வதோதரா தொகுதியில் நரேந்திரமோடி வெற்றி பெற்றுள்ளார். மோடியின் பாஜக கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் 36 வாக்குள் என்ற குறைந்த வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இரு சாதனைகளையும் பாஜக வசப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் துப்ஸ்தான் சீவங். இவர் பெற்ற வாக்குகள் 31 ஆயிரத்து 111. இவருக்கு அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளர் குலாம் ரசா 31ஆயிரத்து 75 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 36 மட்டுமே.

2வது இடம் பிடித்த சுயேச்சை வேட்பாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து சுயேச்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP candidate Thupstan Chhewang won from Ladakh Parliamentary constituency with a narrow margin of 36 votes from his nearest rival Ghulam Raza, a congress rebel who was fighting the elections as an independent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X