For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News Live: வைகோ பிரசாரத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்: தமிழிசை, எச்.ராஜா கடும் கண்டனம்

காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரசார யாத்திரையின் போது கருப்புக் கொடி பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

சித்தராமையா கடிதம்

காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரையறையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்பது நிலைப்பாடு.

மத்திய அரசோ, கர்நாடகாவின் குரலில், ஸ்கீம் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்கிறது. தற்போது தாங்கள் உருவாக்கிய திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதிநீரை பங்கீட்டுக்கான வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்கிறது கர்நாடகா.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது எனவும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Newest First Oldest First
5:37 PM, 22 Apr

திருத்தணியில் 107 டிகிரி வெயில்- மக்கள் தவிப்பு
3:46 PM, 22 Apr

உடன்குடியில் பாஜகவினர் மீது தாக்குதலுக்கு கண்டனம்
3:46 PM, 22 Apr

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கண்டனம்
3:40 PM, 22 Apr

கர்நாடகா சட்டசபை தேர்தல்
3:40 PM, 22 Apr

காங். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
2:15 PM, 22 Apr

காபூல் குண்டுவெடிப்பில் 31 பேர் பலி
2:03 PM, 22 Apr

மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
1:58 PM, 22 Apr

ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் தமிழர் ஒன்று கூடல்
1:58 PM, 22 Apr

காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம்
1:58 PM, 22 Apr

காவிரி- ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்
1:34 PM, 22 Apr

வன்முறையை தூண்டுகிறது வைகோ யாத்திரை- தமிழிசை
1:34 PM, 22 Apr

வைகோ யாத்திரைக்கு தடை விதிக்க தமிழிசை வலியுறுத்தல்
1:32 PM, 22 Apr

ஐதராபாத் மாநாட்டில் சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு
1:32 PM, 22 Apr

சிபிஎம் பொதுச்செயலாளராக யெச்சூரி மீண்டும் தேர்வு
1:23 PM, 22 Apr

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ77.19
1:23 PM, 22 Apr

6 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு
1:22 PM, 22 Apr

2012-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ77-க்கு விற்பனை
11:26 AM, 22 Apr

புதுவையில் தந்தை பெரியார் திகவினர் போராட்டம்
11:26 AM, 22 Apr

எச்.ராஜா, எஸ்.வி. சேகருக்கு எதிராக புதுவையில் போராட்டம்
11:26 AM, 22 Apr

எச்.ராஜா, எஸ்.வி.சேகர் படங்களுக்கு செருப்படி கொடுத்து போராட்டம்
11:25 AM, 22 Apr

எச். ராஜா, எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
10:42 AM, 22 Apr

நீர்நிலைகளை தூய்மைப்படுத்துவது பெரும் கடமை- கமல்
10:41 AM, 22 Apr

பள்ளிக்கூடங்கள் திறந்த பின் தன்னார்வலர்கள் உதவ வேண்டும்
10:41 AM, 22 Apr

தமிழகத்தின் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை- கமல்
10:41 AM, 22 Apr

வெகுவிரைவில் மய்யம்விசில் ஆப் கிடைக்கும்
10:12 AM, 22 Apr

ஆளுநர் பன்வாரிலாலை திரும்பப் பெற கோரிக்கை
10:11 AM, 22 Apr

ஜனாதிபதிக்கு சிபிஎம் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கடிதம்
10:11 AM, 22 Apr

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பு என சந்தேகம்- பாலகிருஷ்ணன்
9:53 AM, 22 Apr

வைகோ வாகனம் மீது கற்கள் வீசி தாக்குதல்
9:53 AM, 22 Apr

உடன்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ பிரசாரம்
READ MORE

English summary
Karnataka CM Siddaramaiah has written to Prime Minister Narendra Modi over the Cauvery issue. He has reportedly written that Karnataka is opposed to the formation of Cauvery Management Board, which Tamil nadu has been demanding. Siddaramaiah has also sought a meeiting with PM Modi at the earliest to discuss the matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X