For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாபில் ஆளும் பாஜக கூட்டணிக்கு மரண அடி... ஓட ஓட விரட்டிய காங்கிரஸ்

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோமணி பாஜக கூட்டணிக்கு மரணஅடி கிடைத்துள்ளது. ஆளும் கட்சியை காங்கிரஸ் கட்சி ஓட ஒட விரட்டியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பட்டியாலா: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆளும் சிரோமணி பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்தது போல மரணஅடி கிடைத்துள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சிகளும் அறுவடை செய்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங் பட்டியாலாவில் முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பிரபல நட்சத்திர வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

BJP decimated by Congres and AAP in Punjab

ஆளும் கட்சிக்கு மரண அடி

ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிடத் தகுந்த தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் ஆளும் ஆளும் சிரோமணி பாஜக கூட்டணிக்கு மரணஅடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கை ஒரு பக்கம் அடித்து விட ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பமும் ஆளும் கட்சியை துடைத்து தூசி தட்டி வருகிறது.

மக்களின் அதிருப்தி

பஞ்சாப் மாநிலத்தில் கட்டுக்கடங்கா ஊழல், அம்மாநிலத்தை சீரழித்துவரும் போதை வஸ்துகள் கடத்தல் - புழக்கம் என்று ஆளும் கூட்டணி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள்.
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதை அகாலிகள் ஆதரித்தனர், தங்களுடைய கட்சி நிர்வாகிகளின் ஆணவப் போக்குக்குத் துணை நின்றனர் என்பதும் சிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணியினர் மீதான அதிருப்திக்குக் காரணங்களாக இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை

பஞ்சாப் மாநில மக்களின் ஒட்டு மொத்த கோபமும் ஆளும் கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளதை இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இறங்குமுகமாக இருக்கும் இத்தருணத்தில், பஞ்சாபில் வெற்றி பெறுவதன் மூலம் ஒரு புதிய நம்பிக்கையை அது பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி பயன்படுத்துமா?

கடந்த 2002 சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றிவாய்ப்பை வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் இழந்தது. காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று எல்லா கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. அதே போல காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆளுங்கட்சி மீதான கோபத்தை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்திக்கொண்டது என்றே கூற வேண்டும்.

English summary
Ruling BJP has been decimated by Congres and AAP in Punjab in the assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X