For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். கட்சியையே 'ஆட்டைய' போட்டு மாஜி எம்எல்ஏக்களையே வேட்பாளர்களாக்கி வெற்றி தம்பட்டம் அடிக்கும் பாஜக

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மாஜி எம்.எல்.ஏக்களை வளைத்து வேட்பாளராக்கித்தான் பாஜகவால் திரிபுராவில் வெல்ல முடிந்தது.

By Mathi
Google Oneindia Tamil News

அகர்தலா: காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து அக்கட்சியின் மாஜி எம்.எல்.ஏக்களையே வேட்பாளர்களாக நிறுத்தி மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது பாஜக.

திரிபுராவில் பாஜகவுக்கு அடிப்படை அமைப்பு பலம் இல்லை. அதனால் என்ன? இருக்கிற காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்வது என களமிறங்கியது பாஜக.

காங்கிரஸே பாஜகவாக...

காங்கிரஸே பாஜகவாக...

இது ஒர்க் அவுட் ஆனது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் அப்படியே பாஜகவாக விஸ்வரூபமெடுத்தது. சரி வேட்பாளர்களுக்கு என்ன செய்வது?

சர்வேக்கள் அடிப்படையில் வேட்பாளர்கள்

சர்வேக்கள் அடிப்படையில் வேட்பாளர்கள்

ஒவ்வொரு தொகுதியிலும் 3 சர்வேக்களை நடத்தியது பாஜக. இதன் அடிப்படையில் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 51 பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

பாஜக வேட்பாளர்களாக மாஜி காங். எம்.எல்.ஏ.க்கள்

பாஜக வேட்பாளர்களாக மாஜி காங். எம்.எல்.ஏ.க்கள்

இவர்களில் 44 பேர் காங்கிரஸ் கட்சியின் மாஜி எம்.எல்.ஏக்கள். காங்கிரஸ் வாக்குகளை தமக்கானதாக மடை மாற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்களது வேட்பாளர்களாக்கி ஆஹா வென்றுவிட்டோம் என தம்பட்டம் அடிக்கிறது பாஜக.

கட்சியை ஆட்டைய போட்டு ஜெயிச்சதப்பா

கட்சியை ஆட்டைய போட்டு ஜெயிச்சதப்பா

பாஜகவின் தத்துவார்த்த அரசியல் காலாவதியாகிவிட்டது. வாக்கு அரசியலுக்காக பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், அடுத்த கட்சியையே கபளீகரம் செய்வது என அத்தனை ஜனநாயக அரசியலை குழிதோண்டி புதைக்கும் யுக்திகளை கையிலெடுத்து வருகிறது பாஜக. இப்படி ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டு ஈசான மூலையில் அமோகமாக வெற்றி பெற்றுவிட்டோம் என கூசாமல் பச்சை பொய்யை அவிழ்த்து விடுகிறது பாஜக. பாஜக திரிபுராவில் முடிவுரை எழுதியது இடதுசாரி அரசுக்கு. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை ஏப்பம் விட்டுதான் இந்த முடிவுரை எழுதப்பட்டிருப்பது என்பதை மறுப்பதற்கு இல்லை.

English summary
BJP's victory in Tripura Assembly Elections not for its Hindutva Politics. BJP captured the Congress party and announced Ex Congress MLAs as its own candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X