For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1,034 கோடி வருமானம்.. இந்தியாவிலேயே பாஜகதான் பணக்கார கட்சி.. இதுதான் அந்த வளர்ச்சியோ?

இந்தியாவிலேயே பாஜகதான் பணக்கார கட்சி என்று டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலேயே பாஜகதான் பணக்கார கட்சி என்று டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒருவருடம் மட்டும் பாஜகவிற்கு ரூ.1,034 கோடி வருமானம் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த வருமான விபரங்களின் படி இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பாஜக கட்சி பெரிய அளவில் வளர்ந்து இருப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த ஆய்வின் படி கடந்த ஒருவருடம் மட்டும் பாஜகவிற்கு ரூ.1,034 கோடி வருமானம் வந்துள்ளது. இந்தியாவிலேயே பாஜகதான் அதிக வருமானம் ஈட்டிய கட்சி ஆகும். பாஜகவிற்கு அடுத்து காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடம் வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ரூ.225.36 வருமானத்துடன் இந்த இடம் பிடித்துள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

முக்கியமாக 2016-2017ல் தான் பாஜக கட்சி அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 80 சதவிகித வளர்ச்சி அந்த கட்சிக்கு இந்த வருடத்தில்தான் வந்துள்ளது. 200 கோடியாக இருந்த வருமானம் 1000ம் கோடியை தாண்டியது இந்த வருடத்தில்தான்.

எவ்வளவு செலவு

எவ்வளவு செலவு

இந்த பணத்தை எல்லா கட்சிகளும் தேர்தலுக்கும், விளம்பரத்திற்கு செலவு செய்துள்ளது. அதன்படி பாஜக கட்சி ரூ.1,034 கோடி வருமானத்தில் ரூ.710.05 கோடி செலவு செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அவர்கள் பெறும் வருமானத்தை விட 100 கோடி அதிகம் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் ரூ.321 கோடி செலவு செய்துள்ளது.

ஏழை கட்சி

ஏழை கட்சி

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் ஏழ்மையான கட்சி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.2 கோடி வருமானத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 100 கோடி வருமானம் வருகிறது. மாநில காட்சிகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை.

English summary
BJP has declared as the richest party in India with Rs 1,034 crore income. Congress comes to the second place with a declared income of Rs. 225.36.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X