For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் அடித்து நொறுக்கும் பாஜக! 135 பேர் பலியான மோர்பி தொகுதியில் நிலை என்ன? காங். ரொம்ப பாவம்

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் 135 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மோர்பி பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் நிலவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும், அதே ஆட்சியை தக்கவைக்க உதவுகிறது.

குஜராத்தில் டிச.1 மற்றும் டிச.5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி. காங் நிலவரம் என்ன? குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி. காங் நிலவரம் என்ன?

 மோர்பி பால விபத்து

மோர்பி பால விபத்து

தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு குஜராத்தில் மோர்பியில் மிக மோசமான பால விபத்து நடைபெற்றது. கடந்த அக். மாதம் குஜராத்தில் நதியின் குறுக்கே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலத்தில் திடீர் விபத்து ஏற்பட்டது. நாட்டில் நடந்த மோசமான பால விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 150 ஆண்டுகள் பழமையான இந்த மோர்பி தொங்கு பால விபத்தில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாஜக

பாஜக

இந்தச் சம்பவம் குறித்து பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையும் நடந்து வருகிறது. குஜராத் தேர்தலுக்கு வெறும் சில வாரங்களுக்கு முன்பு இந்த விபத்து நடந்திருந்த நிலையில், இது குஜராத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதை பொய்யாக்கும் வகையில் பாஜக குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டும் பாஜக அதிகப்படியான இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மோர்பி

மோர்பி

மோசமான பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் முதலில் பாஜக பின்னடைவைச் சந்தித்து இருந்தது. இருப்பினும், அடுத்தடுத்து சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை பெற்றார். இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் படேல் ஜெயந்திலால் ஜெராஜ்பாய் உள்ளார். இருப்பினும், இப்போதே இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 20,000ஐ தாண்டிவிட்டது. முதல் சில சுற்றுகள் முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மியின் பங்கஜ் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

 குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

குஜராத்தில் கடந்த 2017 தேர்தலில் பாஜகவின் இடங்கள் சற்று குறைந்தன. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், பாஜக பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், 99 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களுக்குப் பிறகு முதல்முறையாக 77 இடங்களில் வென்றன. இன்று குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்தளவுக்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே!

English summary
BJP is trailing from Morbi where deadly accident took place: Gujarat election latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X