For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுஷ்மா, ஜேட்லி மரணம் தொடர்பாக சர்ச்சை பேச்சு.. பிரக்யாசிங் தாக்கூருக்கு பாஜக வாய்ப்பூட்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    marak shakti is the reason behind BJP leaders dismissals : MP Pragya Thakur

    போபால்: பாஜகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் மத்திய அமைச்சர்களுமான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரது அடுத்தடுத்த மரணங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய லோக்சபா எம்.பி. சாத்வி பிரக்யாசிங் தாக்கூர் பொதுஇடங்களில் பேசுவதற்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளது.

    மாலேகான் குண்டுவெடிப்பு சதியில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர் பிரக்யா சிங் தாக்கூர். லோக்சபா தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பிரக்யாசிங் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துமே சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.

    BJP issues gag order on Pragya Thakur

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தம்மை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்காரே மரணத்துக்கு காரணமே என்னுடைய சாபம்தான் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார் பிரக்யாசிங். மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என புகழாரம் சூட்டி பஞ்சாயத்தில் அவர் மீண்டும் சிக்கினார்.

    அண்மையில் போபாலில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய சாத்வி பிரக்யாசிங் தாக்கூர், பாஜகவின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைய காரணமே எதிர்க்கட்சிகளின் பில்லி சூனிய வேலைதான் என ஒரே போடாக போட்டார். அவரது இந்த பேச்சால் பாஜகவினரே அதிர்ந்து போயினர்.

    22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்!22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்!

    தொடர்ந்து எதை பேசினாலும் சர்ச்சையாக பேசுவது என்கிற பாணியையே பிரக்யாசிங் தாக்கூர் கடைபிடித்து வருகிறார். இதனால் பொது இடங்களில் பிரக்யாசிங் தாக்கூர் கருத்து தெரிவிக்க பாஜக மேலிடம் தடை விதித்துள்ளது.

    English summary
    BJP High Command issued gag order on Pragya Thakur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X