For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே.. டெபாசிட் இழப்பதில் வரலாறு படைத்த ஜேடிஎஸ் - பாஜக.. ஒன்னு ஆளுங்கட்சி, இன்னொன்னு எதிர்க்கட்சி!

கர்நாடகா தேர்தலில் அதிக டெபாசிட்டை இழந்த கட்சிகள் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தையும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக!

    பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் அதிக டெபாசிட்டை இழந்த பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தையும், மஜத ஆளும் கட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது. ஆனால் குறைந்த அளவில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.

    கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் 222 தொகுதிக்கு 2,844 பேர் போட்டியிட்டனர். பொதுவாக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஒருவருக்கு ரூ. 10,000 டெபாசிட்டாக பெறப்படும்.

    அந்த வேட்பாளர் எஸ்சி, எஸ்டியாக இருந்தால் ரூ.5000 டெபாசிட்டாக பெறப்படும். தேர்தல் ஆணையத்தின் சட்டபடி, ஒரு தொகுதியில் மொத்தம் பெற்ற ஓட்டுகளில் குறைந்தபட்சம் 6-இல் ஒரு பங்கை வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும்.

    டெபாசிட் இழப்பு

    டெபாசிட் இழப்பு

    அவ்வாறு பெறாவிட்டால் அந்த டெபாசிட் தொகை அரசு கருவூலத்துக்கு செல்லும். இந்நிலையில் மொத்தம் போட்டியிட்ட 2,844 வேட்பாளர்களில் 2,337 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

    28 சதவீதம்

    28 சதவீதம்

    மொத்தம் 82.20 சதவீதம் பேர் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 82.10 சதவீம் பேர் டெபாசிட் இழந்துள்ளனர். 1957-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 28 சதவீதம் பேர் மட்டுமே டெபாசிட் இழந்துள்ளனர்.

    டெபாசிட் இழந்து விட்டது

    டெபாசிட் இழந்து விட்டது

    அதன்பிறகு வந்த தேர்தலில் இந்த சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு 75.60 சதவீதம் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த ஆண்டு டெபாசிட் இழந்த கட்சிகளில் பாஜக 16.2 சதவீதமும், ஜேடிஎஸ் 10.7 சதவீதமும், காங்கிரஸ் 5.9 சதவீதம் மட்டுமே டெபாசிட் இழந்துள்ளது.

    குறைந்தபட்ச இழப்பு

    குறைந்தபட்ச இழப்பு

    இதில் என்ன வேடிக்கை என்றால் அதிக அளவு டெபாசிட் இழந்த பாஜக எதிர்க்கட்சியாகிறது. ஜேடிஎஸ் ஆளும் கட்சியாகிறது. ஆனால் குறைந்த அளவு டெபாசிட் இழந்த காங்கிரஸோ பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டினால் ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க கைகொடுத்தது.

    23 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே

    23 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே

    கர்நாடகத்தில் 10 வேட்பாளர்களில் 8 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். 1129 வேட்பாளர்களில் 1114 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். சமாஜ்வாடி, ஜேடியூ, சிவசேனா ஆகிய கட்சிகளுக்கும் இதே விதிதான். 23 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே டெபாசிட் பெற்றார்.

    English summary
    BJP and JDS lose their deposit in Karnataka assembly election 2018. But Congress lost percentage is low when compared to bjp and jds. JDS is going to rule the state, BJP is opposition party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X