For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மீது பாஜக கடும் சாடல்- லடாக்கில் மட்டும் கூட்டணியாம்!

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியை மிக கடுமையாக விமர்சிக்கிறது பாஜக. ஆனால் லடாக்கில் அதே தேசிய மாநாட்டு கட்சியுடன் பாஜக கைகோர்த்து கூட்டணியும் அமைத்திருக்கிறது. இதனை இரு கட்சிகளின் தலைவர்களுமே நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் சிறைகளில் இருந்து அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்ற புதிய அணி உதயமானது. இதில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா மைய குளியலறையில் ரகசிய கேமரா .. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கைது கொரோனா மைய குளியலறையில் ரகசிய கேமரா .. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கைது

வளர்ச்சி கவுன்சில் தேர்தல்

வளர்ச்சி கவுன்சில் தேர்தல்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது இந்த அணியின் பிரதான கோரிக்கை. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சிலில் இந்த கூட்டணி போட்டியிடுகிறது. இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

அமித்ஷா கடும் விமர்சனம்

அமித்ஷா கடும் விமர்சனம்

இந்த கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த குப்கர் கூட்டணியானது ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் வெளிநாட்டின் தலையீட்டை இழுத்துவிடுகின்றனர் என்பது எல்லாம் பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டு.

லடாக்கில் விநோத கூட்டணி

லடாக்கில் விநோத கூட்டணி

இன்னொரு பக்கம், 26 உறுப்பினர்களை லடாக் கார்கில் வளர்ச்சி கவுன்சிலில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இதே பாஜக கூட்டணியும் அமைத்துள்ளது. இந்த 26 உறுப்பினர்களில் 10 பேர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியினர்; காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 8 பேர்; பாஜகவினர் 3 பேர்; எஞ்சியவர்கள் சுயேட்சை உறுப்பினர்கள். 4 பேர் நியமன உறுப்பினர்கள்.

ஆமாம் கூட்டணிதான்

ஆமாம் கூட்டணிதான்

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியை விமர்சித்துவிட்டு லடாக்கில் கை கோர்ப்பது பற்றி கருத்து தெரிவித்த பாஜகவினர், இது லடாக் தேசிய மாநாட்டு கட்சி; விரைவில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியும் பாஜகவுடன் கை கோர்க்கும் என்று வினோதமான பதிலைத் தருகின்றனர். இதேபோல லடாக் தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களும், எங்கள் தலைவர் பரூக் அப்துல்லாதான் என இன்னொருவிதமான பதிலை சொல்கின்றனர்.

English summary
BJP join hands with National Conference in Kargil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X