For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதுக்கு ரூ.70,000, நிலத்தை ஹேமமாலினிக்கு சும்மாவே கொடுத்திருக்கலாமே: பாஜக தலைவர் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகை ஹேமமாலினிக்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.70 ஆயிரத்திற்கு அளிப்பதற்கு பதில் இலவசமாக கொடுக்கலாமே என்று மூத்த பாஜக தலைவர் லக்ஷ்மி காந்தா சாவ்லா மகாராஷ்டிரா அரசை விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசு பாஜக எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினிக்கு மும்பையில் முக்கிய இடத்தில் உள்ள 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை அளித்துள்ளது. பல கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை வெறும் ரூ.70 ஆயிரத்திற்கு அளித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

ஹேமமாலினியின் நடன அகாடமிக்கு தான் அந்த நிலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹேமமாலினிக்கு மிகக் குறைந்த விலையில் நிலத்தை அளித்த மகாராஷ்டிரா அரசை பாஜக மூத்த தலைவர் லக்ஷ்மி காந்தா சாவ்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

BJP leader slams Maha govt for giving Mumbai plot to Hema Malini at 'throwaway' price

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

ஹேமமாலினியின் டான்ஸ் அகாடமிக்கு மகாராஷ்டிரா அரசு பல கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.70 ஆயிரத்திற்கு அளித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இது போன்ற சலுகைகளை பெறுவது சட்டவிரோதம் ஆகும்.

மாநிலத்தில் ஹேமமாலினி ஒருவர் தான் தனது டான்ஸ் அகாடமி மூலம் நாட்டின் கலாச்சாரத்தை பரப்புகிறாரா என்பதை மகாராஷ்டிரா அரசு விளக்க வேண்டும். ரூ.70 ஆயிரம் வாங்கும் நாடகத்தை நிறுத்திக் கொண்டு அவருக்கு நிலத்தை இலவசமாகவே அளிக்கட்டும். சமூக சேவையாக நினைத்து கலாச்சாரத்தை பரப்புபவர்களுக்கு நிலத்தை இலவசமாக அளிக்க வேண்டும் என்றார்.

English summary
Senior BJP leader Laxmi Kanta Chawla on Sunday hit out at her party-led government in Maharashtra for allotting land in Mumbai to actor and MP Hema Malini at "throwaway" price, terming it as "illegitimate benefit".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X