For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓரினச் சேர்க்கையாளர்களும் ஊனமுற்றவர்களே.. சாமியின் புது உளறல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் மரபணு ரீதியாக ஊனமுற்றவர்கள் எனத் தெரிவித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி.

டிவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியின் ஸ்டைல். ஆனால், சமீபகாலமாக டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளைக் குறைத்திருந்தார் சுப்பிரமணியன் சாமி. காரணம், ‘ராமர் கோயில் மற்றும் சட்ட கோணங்கள்' எழுதுவதால் தன்னால் முன்பைப் போல் அதிகம் டிவிட் செய்ய இயலவில்லை என அவரே விளக்கமும் அளித்திருந்தார்.

BJP Leader Subramanian Swamy Thinks Homosexuals Are 'Genetically Handicapped'

இந்நிலையில், தற்போது மீண்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவர்.

கடந்த வாரம் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ தடை இல்லை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வரவேற்றார்.

அமெரிக்க நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் 377வது பிரிவை திருத்தி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி நடத்தினர்.

இந்த நிலையில், சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘நாம் உடல் ஊனமுற்றவர்களை மதிக்கிறோம். ஓரினச் சேர்க்கையாளர்களும் மரபணு ரீதியாக உடல் ஊனமுற்றவர்கள் தான்' எனத் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சாமியின் இந்தப் பதிவு பெரும் விவாவதத்திற்கு ஆளாகியுள்ளது. டிவிட்டரில் அவரைப் பாலோ செய்யும் சிலரே, சுப்பிரமணியன் சாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

English summary
"We respect handicapped persons. Homos are genetically handicapped," tweeted former Union Minister and five-term MP Subramanian Swamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X