For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2!

லடாக் சுயாட்சி மலை வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது

Google Oneindia Tamil News

லே, லடாக்: லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் லடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.. அதிகபட்சமாக பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில் தபால் மூலமாகவும், அக்டோபர் 22-ம் தேதி 26 தொகுதிகளில் 294 வாக்கு சாவடிகளிலும் நடைபெற்றது.. இதில் மொத்தம் 54,257 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

26 உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

BJP leading in Ladakh Autonomous Hill Development Council election

காரணம், ஜம்மு காஷ்மீர் பிராந்தியம் பிரிக்கப்பட்டு, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.. 2538 தபால் வாக்குகளும், 1,635 ஈடிசி வாக்குகளும் எண்ணப்பட்டன.. அதில், பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது..

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனாஎன்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா

12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.. காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.. மேலும் 2 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.. காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பீகார் மாநில தேர்தல் முடிவு என்னவாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், லடாக்கின் வெற்றி பாஜகவுக்கு தெம்பை தந்து வருகிறது.

English summary
BJP leading in Ladakh Autonomous Hill Development Council election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X