For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்திலும் காங்கிரஸை விரட்டியடித்த பாஜக.. 26 தொகுதியிலும் முன்னிலை!

Google Oneindia Tamil News

டெல்லி: காந்திநகர் குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதை நிலவரப்படி பாஜக கூட்டணி 336 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பாஜக கட்சி மட்டும் 290 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதானல் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. மீண்டும் பாஜகவே மத்தியில் ஆளும் கட்சியாகியுள்ளது.

போர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி போர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி

டெல்லி

டெல்லி

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக சாதித்து வரும் நிலையில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜகதான் முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இதேபோல் ராஜஸ்தானில் 25 தொகுதிகளில் 24 தொகுதிகளை பாஜக வசப்படுத்தியுள்ளது. பீகாரிலும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

அப்பாவின் மரணத்தில் தொடங்கிய பயணம்.. விழுந்த இடத்தில் எழுந்த ஜெகன் மோகன்.. ஆந்திர மகுடம் சூடினார்! அப்பாவின் மரணத்தில் தொடங்கிய பயணம்.. விழுந்த இடத்தில் எழுந்த ஜெகன் மோகன்.. ஆந்திர மகுடம் சூடினார்!

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்டில் 5 தொகுதிகளிலும் பாஜகதான் முன்னிலையில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 55 இடங்களில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

அமித்ஷா அசத்தல்

அமித்ஷா அசத்தல்

இந்நிலையில் குஜராத் மாநிலத்திலும் பாஜக, காங்கிரஸ்க்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் 26 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மோடிக்கு ஆதரவு

மோடிக்கு ஆதரவு

பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி குஜராத் முதல்வராக இருந்த நிலையில் 2014ஆம் ஆண்டு அந்த பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மீண்டும் குஜாராத் மாநிலம் பிரதமர் மோடிக்கு அமோக ஆதரவு அளித்துள்ளது.

English summary
BJPleads in all the constituency at Gujarat. BJP gets 26 out of 26 in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X