For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணி 259 இடங்களில் வெல்லும்: ஆட்சியை பிடிக்கும்- என்டிடிவி கருத்துக் கணிப்பு

By Chakra
|

டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 259 இடங்களில் வெல்லும் என்று என்டிடிவியும் ஹன்சா ரிசர்ச் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மார்ச் மத்தியில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளில் ஒரு பகுதியை என்டிடிவி தலைமை ஆசிரியர் பிரணாய் ராய் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

283ல் 160:

283ல் 160:

இதில் தமிழ்நாடு, பிகார், சட்டீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 283 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் பாஜக கூட்டணி (சிவசேனா, தெலுங்கு தேசம், மதிமுக, தேமுதிக, பாமக, ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி ஆகியவை இணைந்து) 160 இடங்களைப் பிடிக்கும் என்று தெரியவந்தது. இதில் பாஜக மட்டும் தனித்து 123 இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்தது.

226 தொகுதிகளுக்கான முடிவுகள்...

226 தொகுதிகளுக்கான முடிவுகள்...

இந் நிலையில் நேற்று உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, ஒரிஸ்ஸா, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 226 தொகுதிகளுக்கான முடிவுகளை என்டிடிவி வெளியிட்டது.

மொத்தமுள்ள 534 தொகுதிகளில் 509 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அஸ்ஸாம் தவிர்த்த வட கிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 28 தொகுதிகளில் என்டிடிவி கருத்துக் கணிப்பு நடத்தவில்லை.

226 தொகுதிகளுக்கான முடிவுகள்...

226 தொகுதிகளுக்கான முடிவுகள்...

இந் நிலையில் நேற்று உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, ஒரிஸ்ஸா, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 226 தொகுதிகளுக்கான முடிவுகளை என்டிடிவி வெளியிட்டது.

மொத்தமுள்ள 534 தொகுதிகளில் 509 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அஸ்ஸாம் தவிர்த்த வட கிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 28 தொகுதிகளில் என்டிடிவி கருத்துக் கணிப்பு நடத்தவில்லை.

509 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 259:

509 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 259:

இந்த 509 தொகுதிகளில் பாஜக கூட்டணி 259 தொகுதிகளில் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இதில் பாஜக மட்டும் 214 இடங்களில் வெல்லும் என்றும், கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, தெலுங்கு தேசம், மதிமுக, தேமுதிக, பாமக, ராம்விலாஸ் பாஸ்வானின் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சி ஆகியவை 42 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் பாஜக கூட்டணி கடந்த தேர்தலை விட 118 இடங்களில் கூடுதலாக வெல்லும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 123 இடங்கள்:

காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 123 இடங்கள்:

அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி வெறும் 123 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இது கடந்த தேர்தலை விட 108 இடங்கள் குறைவாகும்.

இந்த இரு கூட்டணிகளிலும் இல்லாத பிற கட்சிகள் மொத்தம் 161 இடங்களைப் பிடிக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கடந்த தேர்தலை விட 10 இடங்கள் குறைவாகும்.

ஜெகன்- ராவ் உதவியோடு ஆட்சியைப் பிடிக்கலாம்:

ஜெகன்- ராவ் உதவியோடு ஆட்சியைப் பிடிக்கலாம்:

இதன்மூலம் மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கு மிக அருகே பாஜக கூட்டணி செல்லும் என்று என்டிடிவி கூறுகிறது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் சந்திரசேகர் ராவ், சீமாந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணியை ஆதரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இதில் ஜெகன் கட்சி 10 இடங்களிலும் டிஆர்எஸ் 7 இடங்களிலும் வெல்லவுள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

English summary
The BJP could cross the 214 seats in the Lok Sabha while the party-led NDA could win between 259 seats, putting it within striking distance of forming a government if polls are held today, according to an NDTV opinion poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X