For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அணிக்கு 233 இடங்கள்; காங். கூட்டணிக்கு 119 இடங்கள்- ஏ.பி.பி. நியூஸ்- நீல்சன் கருத்து கணிப்பு

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 119 இடங்களும் கிடைக்கும் என்று ஏ.பி.பி. நியூஸ்- நீல்சன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி. நியூஸ்- நீல்சன் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் பாஜக அணிதான் வெல்லும் என்கிறது இக்கருத்து கணிப்பு

பாஜகவுக்கு 209, காங்கிரஸுக்கு 91

பாஜகவுக்கு 209, காங்கிரஸுக்கு 91

இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 209 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 91 தொகுதிகளிலும் வெற்றி பெறுமாம்.

கிழக்கு மாநிலங்களில் ...

கிழக்கு மாநிலங்களில் ...

நாட்டின் கிழக்கு மாநிலங்களில் உள்ள 142 தொகுதிகளில் மாநிலக் கட்சிகள் 71 தொகுதிகளில் வெற்றி பெறும். இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 39 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 32 இடங்களும் கிடைக்குமாம்.

மேற்கு மாநிலங்களில்...

மேற்கு மாநிலங்களில்...

நாட்டின் மேற்கு மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் 86 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.

வடக்கு மாநிலங்களில்..

வடக்கு மாநிலங்களில்..

இதேபோல வடக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 151 இடங்களில் 87 இடங்களில் பாஜக வெற்றிபெறும்.

தென் மாநிலங்களில்

தென் மாநிலங்களில்

தென் மாநிலங்களில் 134 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களிலும் பாஜக கூட்டணி 21 இடங்களிலும் மாநிலக் கட்சிகள் 79 தொகுதிகளையும் கைப்பற்றுமாம்.

பாஜக அணிக்கு 233

பாஜக அணிக்கு 233

மொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 119 இடங்களும் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு

மோடிக்கு 54% பேர் ஆதரவு

மோடிக்கு 54% பேர் ஆதரவு

குஜராத் முதல்வர் மோடி பிரதமராக 54% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு 18%

ராகுலுக்கு 18%

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக 18% பேரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, மன்மோகன் சிங்குக்கு தலா 5% பேர் ஆதரவளித்துள்ளனர்.

English summary
If Lok Sabha elections were to be held today, Narendra Modi-led Bharatiya Janata Party will emerge as the front-runner, according to ABP News-Nielsen National Poll. The latest pre-poll survey predicts a big surge for BJP from the last election, taking the seat count for the National Democratic Alliance that it leads to 233.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X