For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்ற பணம் லஞ்சமாகாது... அது கடன்: முதல்வர் வீர்பத்ரர் விளக்கம்

Google Oneindia Tamil News

Virbhadra Singh
டெல்லி: தனியார் மின் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று, அந்நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக, எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ள புகாரை மறுத்துள்ளார் இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங்.

இமாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் மின் நிறுவனத்திடமிருந்து, முதல்வர் வீர்பத்ர சிங், லஞ்சம் பெற்று, முறைகேடான வகையில் அந்நிறுவனத்திற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, அக்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வீரபத்ர சிங் தன் மீதான குற்றச்சாட்டை மீண்டும் மறுத்துள்ளார். தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்ற பணம் லஞ்சம் அல்ல, அது கடன் என அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :-

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து, என் சொந்த தேவைக்காக, பணத்தை கடனாகப் பெற்றேன். என் வயதை கருத்தில் கொண்டு, வங்கிகள் எனக்கு கடன் தர மறுத்ததால், நான் தனியார் நிறுவனத்திடம் கடன் பெறும் சூழல் ஏற்பட்டது. அத்தொகையானது, காசோலை வடிவில் பெறப்பட்டு, அவை காசோலையாகவே திருப்பித் தரப்பட்டுள்ளது.

நாட்டில் லஞ்சம் பெறும் எவரும், பணத்தை காசோலை வடிவில் பெறுவதில்லை. 2011ம் ஆண்டு, நான் மத்திய அமைச்சராக இருந்த போது, அப்பணம் பெறப்பட்டுள்ளது. அப்போது நான் மாநில முதல்வர் ஆவேன் என, நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.இமாச்சல பிரதேச மாநில அரசியலில், பா.ஜ.,வின் முன்னேற்றத்திற்கு நான் பெரும் தடைக்கல்லாக இருப்பதால், அவர்கள் என் மீது வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Himachal Pradesh chief minister Virbhadra Singh slammed accusations of quid pro quo with a power company he has taken loans from, saying he had cancelled the said project while BJP had gone out of its way to give extensions to the defaulting company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X