For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமாசல பிரதேச தேர்தல்: ஆளும் கட்சியே மீண்டும் வென்றது இல்லை.. 37 வருடமாக தொடரும் வரலாறு

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த 37 ஆண்டுகளாக ஆளும் கட்சி மீண்டும் வென்றதில்லை என்ற நிலைதான் இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை இந்த வரலாறு மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் இந்த வரலாறு மாற்றமின்றி தொடருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் அழகை கொண்ட மாநிலம் இமாசல பிரதேசம். இமாசல பிரதேசம் என்றாலே ஷிம்லாவும் அங்குள்ள குளுமையான சூழலுமே பலருக்கும் நினைவு வரும்.

குளுமையான தட்பவெப்ப நிலை கொண்ட இமாசல பிரதேசத்த்தில் தற்போது தேர்தலால் அனல் பறக்கிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்! ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்!

மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும்

மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும்

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வரும் பாஜக தேர்தல் வேலைகளில் படு சுற்று சுறுப்பாக ஈடுபட்டது. அதே நேரத்தில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வந்தது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போடியிட்டன. தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது. ஆம் ஆத்மி கட்சி தங்கள் இமாசல பிரதேசத்தில் தடம் பதிக்கலாம் என்ற உற்சாகத்துடன் இருந்தது.

கடந்த தேர்தலில் 44 தொகுதிகள்

கடந்த தேர்தலில் 44 தொகுதிகள்

இந்த பரபரப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 12 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரும் இன்று நடைபெற்று வருகிறது. இமாசல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றன. இமாசல பிரதேசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

வரலாற்றை மாற்றும் பாஜக

வரலாற்றை மாற்றும் பாஜக

காங்கிரஸ் 21 இடங்களில் வெற்றிபெற்றது. சிபிஐ(எம்) 1 இடத்தில் வெற்றி பெற்றது. சுயேட்சை வேட்பாளர்கள் இரு இடங்களில் வெற்றி பெற்றனர். இமாசல பிரதேசத்தில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது இல்லை என்ற நிலையே இதுவரை உள்ளது. அதாவது எதிர்ப்பு அலை காரணமாக ஆளும் கட்சி தோற்பதும் எதிர்க்கட்சி ஆட்சியை பிடிப்பதும் என்ற நிலையே இதுவரை இருந்து வருகிறது. 37 வருடமாக நீடிக்கும் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டிலும் இதே நிலைதான் நீடித்துவருகிறது.

சாதித்த காங்கிரஸ்

சாதித்த காங்கிரஸ்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக வெற்றி பெற்று விடும் என்றே வந்தன. இதனால், 37ஆண்டு கால வரலாறு மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை அறுவடை செய்தது. இதன் மூலம் ஆளும் கட்சியே மீண்டும் வெல்லாது என்ற 37 ஆண்டு கால வரலாறு இந்த ஆண்டிலும் முறியடிக்கப்படவில்லை. பெரும்பான்மைக்கு 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 25 இடங்களிலும் சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

English summary
In Himachal Pradesh, the ruling party has not won again for the past 37 years. However, it is clear from the results of post-election polls that this time is history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X