லோக்சபா 4, சட்டசபை 11.. இடைத் தேர்தல் நடந்தது 15 தொகுதி.. பாஜக தோற்றது 13 தொகுதி!
இந்தியா முழுக்க நடந்த 15 இடைத்தேர்தலில் மொத்தம் 2 தேர்தலில் மட்டும் பாஜக வென்றுள்ளது. மற்ற தொகுதிகளில் பாஜக மோசமாக தோல்வி அடைந்துள்ளது.
Recommended Video

டெல்லி: இந்தியா முழுக்க நடந்த 15 இடைத்தேர்தலில் மொத்தம் 2 தொகுதியில் மட்டும் பாஜக வென்றுள்ளது. மற்ற தொகுதிகளில் பாஜக மோசமாக தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா முழுக்க பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது.
இதில் பாஜக ஒரு சட்டமன்ற தொகுதியிலும், ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் வென்றுள்ளது. இதனால் பாஜக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

11 சட்டமன்ற தொகுதி
மொத்தம் இதில் 11 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. 11 இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் தரளி தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற எல்லா தொகுதியிலும் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி, மாநில கட்சி கூட்டணி மட்டுமே வென்றுள்ளது.

எங்கு
பீகார், ஜோகிஹாட்டில் ஆர்ஜேடி வென்றுள்ளது. ஜார்க்கண்ட், சில்லி மற்றும் கோமியாவில் ஜேஎம்எம் வென்றுள்ளது. கர்நாடகா ஆர்.ஆர்.நகரில் காங்கிரஸ் வென்றுள்ளது. கேரளா செங்கணூரில் சிபிஎம் வென்றுள்ளது. மகாராஷ்டிரா கடகோனில் காங்கிரஸ் வென்றுள்ளது. மேகாலயாவின் அம்பாதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. பஞ்சாபின் சாகோத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. உ.பி நூர்பூரில் சமாஜ்வாடி வென்றுள்ளது. மே.வங்கத்தின் மகேஷ்தலாவில் திரிணாமுல் வென்றுள்ளது.

லோக்சபா தேர்தல்
அதேபோல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. மொத்தம் 4 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் பந்தாராவில் என்சிபி வென்றுள்ளது. நாகாலாந்தில் என்டிபிபி வென்றுள்ளது. உபி கைரானாவில் ஆர்எல்டி வென்றுள்ளது. மகாராஷ்டிராவின் பல்காரில் மட்டும் பாஜக வென்றுள்ளது.

தோல்வி முகம்
பாஜக கட்சி தற்போது வரிசையாக தோற்றுக்கொண்டுள்ளது. 2014ல் இருந்து 2018 வரை நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் எல்லாம் பாஜக வரிசையக் தோல்வியை சந்தித்து வந்துள்ளது. இப்போதுவரை மொத்தமாக நடந்த 27 நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் 5 தேர்தலில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன்கள்.. தாக்கரேவை புறக்கணித்த தலைவர்கள்.. மீண்டும் உடையும் சிவசேனா? -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,!












Click it and Unblock the Notifications