For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரிசையாக நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி அடையும் பாஜக.. மாநில கட்சிகள் விஸ்வரூபம்

2014ல் இருந்து 2018 வரை நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் எல்லாம் பாஜக வரிசையாக தோல்வியை சந்தித்து வந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வரிசையாக தேர்தல்களில் தோல்வி அடையும் பாஜக..வீடியோ

    டெல்லி: 2014ல் இருந்து 2018 வரை நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் எல்லாம் பாஜக வரிசையாக தோல்வியை சந்தித்து வந்துள்ளது. மொத்தமாக 23 நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் 4 தேர்தலில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா முழுக்க பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது.

    இதில் பல தொகுதிகளில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 2014ம் ஆண்டை தவிர்த்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பாஜக வரிசையாக தோல்வியை சந்தித்து வந்துள்ளது.

    காங்கிரஸ் எழுச்சி

    காங்கிரஸ் எழுச்சி

    இந்த தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் பெரிய அளவில் எழுச்சிகண்டு இருக்கிறது. மொத்தம் 5 தொகுதிகளில் காங்கிரஸ் கணக்குப்படி வென்றுள்ளது. அதில் 4 தொகுதி பாஜக வசம் இருந்தது. அதேபோல் மீதம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்த கட்சிகள், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் 4 தேர்தலில் வென்றுள்ளது.

    பாஜக மோசம்

    பாஜக மோசம்

    இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. 2014ல் மோடி வென்றவுடன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2ல் பாஜக வென்றது. அதன்பின் மீதம் இருந்த மூன்று வருடங்களில் மொத்தமாக 2 தேர்தலில் மட்டும்தான் பாஜக வென்றுள்ளது. முக்கியமாக 2017, 2018, 2016 இறுதி என எந்த தேர்தலில் பாஜக வெல்லவில்லை.

    மாநில கட்சிகளின் பலம்

    மாநில கட்சிகளின் பலம்

    மேலும் காங்கிரஸ் கட்சியை விட மாநில கட்சிகள்தான் அதிக இடங்களில் வென்றுள்ளது. மாநில காட்சிகள் இந்த 23 தொகுதிகளில் மொத்தம் 14 தொகுதிகளில் வென்றுள்ளது. முக்கியமாக திரிணாமுல், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மிகுந்த பலத்துடன் இருக்கிறது.

    பெரும்பான்மை இல்லை

    பெரும்பான்மை இல்லை

    மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். 30 வருடங்களுக்கு பின் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது தொடர் தோல்விகளால் பெரும்பான்மையை இழந்து கொண்டே வந்தது. மெஜாரிட்டிக்கு 272 உறுப்பினர்கள் தேவை. தற்போது பாஜக கட்சியின் பெரும்பான்மை மொத்தமாக குறைந்து, பெரும்பான்மையை இழந்து இருக்கிறது.பாஜக கட்சியின் பலம் 271 இருக்கிறது.

    English summary
    BJP loses most number Lok- Sabha by-polls, Regional parties makes it to the ground and won most number election. Congress finds it place in many constituency too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X